அமெரிக்கத் தமிழர்
அமெரிக்கத் தமிழர் எனப்படுவோர் தமிழ் பின்புலத்தைக் கொண்டு ஐக்கிய அமெரிக்காவில் குடியேறியவர்களாவர். அதிகமானோர் தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையில் இருந்தும் கல்விக்காகவும் வேலைக்காகவும் அமெரிக்கா சென்று, அந்நாட்டில் குடியுரிமைச் சட்ட உரிமைகளின் அடிப்படையில் அந்நாட்டிலேயே குடியுரிமை பெற்றவர்களாவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் அங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர். ஈழத்தமிழரான ஆனந்த குமாரசுவாமி 1917 களிலேயே (கிட்டத்தட்ட 100 ஆண்டுகள்) அமெரிக்கா சென்று நுண்கலை அருங்காட்சியகத்தில் கீழைத்தேயப் பிரிவின் பணிப்பாளராகவும், ஆய்வாளராகவும் பணிபுரிந்து அங்கேயே குடியேறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தென்னாப்பிரிக்கா, பிரஞ்சு மேற்கு இந்தியா, மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் இருந்தும் அமெரிக்கா சென்று குடியுரிமை பெற்றவர்களும் உள்ளனர். 1983 களின் பின்னர் இலங்கை இனப்பிரச்சினை காரணமாக உலகெங்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் அமெரிக்காவில் புகலிடம் பெற்றவர்களும் உளர். ![]() கலிபோர்னியா, நியூ செர்சி, டெக்சஸ் மாநிலங்களில் தமிழர்கள் செறிவாக வாழ்கின்றனர்.[1] மூன்றாம் நாடு வழங்கல்ஆசிய நாடுகளில் புகலிடம் கோருவோர்களுக்கு அதே நாட்டில் குடியுரிமை வழங்கும் சட்டம் அந்நாடுகளில் இல்லாமையால் யுஎன்எச்சிஆர் போன்ற மனிதவுரிமை அமைப்புகள் மூன்றாம் நாடு வழங்கல் கொள்கையின் ஊடாக மூன்றாம் நாடுகளில் குடியுரிமை பெற்று வழங்கிவருகிறது. அதனடிப்படையில் தாய்லாந்து, ஹொங்கொங் போன்ற ஆசியநாடுகளின் ஊடாக அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களில் கணிசமான ஈழத்தமிழர்களும் அடங்குவர். தமிழ்க் கல்விஅமெரிக்காவின் சில மாகாணங்களில் தமிழ் மொழி ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. மாகாண வாரியாக தமிழ்ப் பாடங்களைக் கற்பிக்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற அமெரிக்கத் தமிழர்கள்
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia