அஜய் ஞானமுத்து
ஆர். அஜய் ஞானமுத்து ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் முதன்மையாக தமிழ் சினிமாவில் பணிபுரிகிறார். 7ஆம் அறிவு மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களின் இயக்குனரான ஏஆர் முருகதாஸுக்கு உதவியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2015-ல், டிமான்ட்டி காலனி என்ற ஹாரர்-த்ரில்லர் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், இந்தத்திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற சூப்பர் ஹிட் படமாகும். அவரது இரண்டாவது படமான இமைக்கா நொடிகள் [2] பிளாக்பஸ்டர் ஆனது.[3] தற்போது இவர் தேசிய விருது பெற்ற நடிகரான விக்ரம் நடிப்பில் கோப்ரா என்னும் பிரமாண்ட திரைப்படத்தை இயக்கி வருகிறார். தனிப்பட்ட வாழ்க்கைஅஜய் தனது பள்ளிப் படிப்பை செயின்ட் ஜான்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், செயின்ட் பேட்ரிக் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தார், பின்னர் லயோலா கல்லூரியில் சேர்ந்தார்.[4] காட்சி தொடர்பியல் துறை மாணவராக இருந்த கல்லூரி நாட்களில், குறும்படங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டினார்.[5] சென்னையில் உள்ள SAE இன்ஸ்டிடியூட்டில் டிஜிட்டல் ஃபிலிம்மேக்கிங் டிப்ளமோவையும் ஒரே நேரத்தில் முடித்தார். தொழில்அஜய் 2010-ல் நாளைய இயக்குநர் சீசன்-1 என்ற குறும்பட தயாரிப்பு நிகழ்ச்சியில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டார், அங்கு அவர் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வந்தார். பின்னர் அவர் திரைப்படத் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து,[6] 7ஆம் அறிவு (2011) மற்றும் துப்பாக்கி (2012) போன்ற படங்களில் பணியாற்றினார்.[7] திரைப்படவியல்
மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia