இமைக்கா நொடிகள் (திரைப்படம்)
இமைக்கா நொடிகள் (Imaikkaa Nodigal) 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படம் ஆர். அஜய் ஞானமுத்து எழுதி இயக்கி, சி. ஜெ. ஜெயக்குமாரால் தயாரிக்கப்பட்டது.[2] அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கன்னா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஆர். டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு, புவன் சீனிவாசனின் படத்தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் அக்டோபர் 30, 2018 அன்று வெளியானது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 இல் தொடங்கப்பட்டது.[3] நடிகர்கள்* அதர்வா - அர்ஜூன்
கதைருத்ரா என்கிற மர்மநபர் சில ஆண்டுகளுக்கு முன் சில முக்கிய நபர்களைக் கொன்றுள்ளார். அவரைக் கண்டுபிடித்து அழித்துவிட்டதாக அறிவிக்கிறார் காவல்துறை அதிகாரி அஞ்சலி விக்ரமாதித்யன். ஆனால், சில ஆண்டுகள் கழித்து அதே பெயரில் அதே குற்றப்பாணியில் ஒருவன் தொடர்கொலைகள் செய்து காவல்துறைக்கு சவால் விடுகிறான். ஆனால், அஞ்சலி விக்ரமாதித்யன் அந்த ருத்ரா வேறு, இந்த ருத்ரா வேறு எனக் கூறி தற்கால தொடர்கொலையாளியை அடையாளம் கண்டு அழிக்கிறார். உண்மைக் குற்றவாளி ருத்ரா ஏன் முந்தைய தொடர்கொலைகளைச் செய்தார்? போலி ருத்ரா தற்காலத் தொடர்கொலைகளை ஏன் செய்தார் என்பதும் படத்தில் திரைக்கதையாகச் சொல்லப்படுகிறது [4]. இப்படம் அதிரடி கதை கொண்ட காதல் படம் என்கிறார் ஆர். அஜய் ஞானமுத்து.[5] படப்பணிகள்இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில்ல் திசம்பர் 2016இல் தொடங்கப்பட்டது. நம்ம மெட்ரோவின் நிலத்தடிப் பாதைகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 25 நாட்களுக்கும் மேலாக ஒளிப்பதிவு செய்துள்ளனர். மெட்ரோ தொடர்வண்டியின் நிலத்தடிப்பாதையில் மட்டும் இரண்டு இரவுகளுக்கு மேல் படப்பிடிப்பு நடந்துள்ளது.[6] இப்படத்தின் படப்பிடிப்பு திசம்பர் 17, 2017 அன்று நிறைவுற்றது.[7] இசைஇத்திரைப்படத்தின் ஒரு பாடல் அக்டோபர் 2017இல் வெளியிடப்பட்டது. காதலிக்காதே என்னும் பாடலினை ஹிப்ஹாப் தமிழாவும், கௌசிக் கிரிசும் பாடியுள்ளனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia