அஜுதியா நாத் கோஸ்லா
அஜுதியா நாத் கோஸ்லா (Ajudhia Nath Khosla ) (1892 திசம்பர் 11 - 1984) [1] இவர் ஓர் இந்திய பொறியியலாளரும் மற்றும் அரசியல்வாதியுமாவார். இவர் இந்தியாவின் மத்திய நீர்வழி பாசன மற்றும் ஊடுருவல் ஆணையத்தின் தலைவராக இருந்தார்.[2] கோஸ்லா புதுதில்லியில் பிறந்தார். மேலும் 1954 முதல் 1959 வரை ரூர்க்கி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார்.[3] இவருக்கு 1954 இல் பத்ம பூசண் மற்றும் 1977 இல் பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.[4] இவர் 1958இல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால் 1959 இல் அதை விட்டு விலகி இந்திய திட்டமிடல் ஆணையத்தில் சேர்ந்தார்.[5][6][7] இவர் 1962 செப்டம்பர் முதல் 1966 ஆகத்து வரையும் மீண்டும் 1966 செப்டம்பர் முதல் 1968 சனவரி வரையிலும் ஒடிசாவின் ஆளுநராக இருந்தார்.[8] 1961 முதல் 1962 வரை இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தலைவராக இருந்தார்.[9] கல்விபஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை ஜலந்தரிலேயே மேற்கொண்டார். 1908இல் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்ற பின்னர், 1912இல் லாகூரில் உள்ள டி.ஏ.வி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர் 1913 இல் தாமசன் கட்டிடப் பொறியியல் கல்லூரியில் (இப்போது இந்திய தொழில்நுட்பக் கழகம், ரூர்க்கி ) சேர்ந்தார். 1916இல் ஒரு கட்டிடப் பொறியாளராக வெளியேறினார். தொழில்1916 இல் பட்டம் பெற்ற பிறகு, பஞ்சாப் பொதுப்பணித் துறையின் நீர்ப்பாசனத் துறையுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். சில ஆண்டுகளில், இந்திய பொறியியலாளர்கள் சேவை நிறுவப்பட்டு, (1919) பக்ரா அணை திட்டத்தின் ஆய்வுகள் மற்றும் விசாரணைகளுக்காக இவருக்கு முதல் பணி (1917 செப்டம்பர் – 1921 மார்ச் ) ஒதுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், இவர் இந்திய பயணப் படையுடன் நியமிக்கப்பட்ட அதிகாரியாக மெசொப்பொத்தேமியாவுக்குச் சென்று 18 மாதங்கள் செலவிட்டார். அங்கு பணியாற்றும் போது (1918-1920) இவர் ஆறுகள் மற்றும் பரந்த பள்ளத்தாக்குகளில் துல்லியமாக சமன் செய்வதற்காக கோஸ்லா வட்டை உருவாக்கினார். 1921 முதல் 1926 வரை இவர் சுலைமங்கே தடுப்பணையை நிர்மாணிப்பதில் ஈடுபட்டார்.[10] 1931ஆம் ஆண்டில் கோஸ்லா அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் மண் மறுசீரமைப்பு, நீர் வெளியேற்றம் மற்றும் அணை வடிவமைப்பில் சமீபத்திய நுட்பங்களைப் படிக்க நியமிக்கப்பட்டார். திரும்பியதும் இவர் சத்லஜ் பள்ளத்தாக்கு கால்வாய்களின் பஞ்சநாத் தலைமைப் பணிக்கு அனுப்பப்பட்டார்.[11] 1936 சூன் மற்றும் செப்டம்பருக்கு இடையில், அபீசாபாத் பிரிவின் பொறுப்பாளராக இருந்தபோது, 'தி டிசைன் ஆப் வையர்ஸ் ஆன் பெர்மியபுள் பவுன்டேசன்' என்ற தனது மகத்தான படைப்பை எழுதினார். இந்த வெளியீடு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் இத்தகைய கட்டமைப்புகளின் வடிவமைப்பில் புரட்சியை ஏற்படுத்தியது. பங்களிப்புகள்பொறியாளராக
கல்வியாளராக
அரசு
அங்கீகாரம்
மேலும் காண்ககுறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia