அஜ்மல் கசாப்
மொகம்மது அஜ்மல் அமீர் கசாப் (Mohammed Ajmal Amir Kasab; செப்டம்பர் 1987 - நவம்பர் 21, 2012) 2008 மும்பாய் தாக்குதல்களில் பங்கெடுத்த ஓர் பாக்கித்தானிய தீவிரவாதி.[4][5] இந்தத் தாக்குதல்களின்போது பிடிபட்ட ஒரே தீவிரவாதியான கசாப் இந்தியாவில் தூக்கிலிடப்பட்டார். துவக்கத்தில் இவர் பாக்கித்தானி அல்லவென்று பாக்கித்தான் அரசு மறுத்து வந்தபோதும் சனவரி, 2009 இல் [6] இவரை பாக்கித்தானிய குடிமகனாக ஒப்புக்கொண்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த இந்திய நீதிமன்றம் மே 3, 2010 அன்று கசாப் கொலை, இந்தியா மீது போர் தொடுத்தல், வெடிகுண்டுகளை வைத்திருத்தல் இன்னும் பிற குற்றங்களைப் புரிந்ததாக தீர்ப்பு வழங்கியது.[7] அதே நீதிமன்றம் மே 6, 2010 அன்று நான்கு குற்றங்களுக்கு மரண தண்டனையும் ஐந்து குற்றங்களுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும் வழங்கியது. இதனை மும்பை உயர்நீதிமன்றம் பெப்ரவரி 21, 2011 அன்று உறுதி செய்தது.[8] மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதியாக மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆகத்து 29, 2012 அன்று இந்திய உச்ச நீதிமன்றமும் மரண தண்டனையை உறுதி செய்தது.[9] குடியரசுத் தலைவரிடம் அஜ்மல் கசாப் கோரிய கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சிறை அதிகாரிகள் நவம்பர் 21, 2012 காலையில் அஜ்மல் கசாப்பின் தண்டனையை நிறைவேற்றினர்.[3][10] தொடர்புள்ளவைமேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia