அஞ்சுனா
அஞ்சுனா (Anjuna) என்பது இந்தியாவின் வடக்கு கோவாவின் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். [1] மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமான இது பார்தேசுவின் பன்னிரண்டு பிராமணச் சமூகங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் சுற்றுலா தலமாகவேத் திகழ்கிறது. 1595இல் நிறுவப்பட்ட புனித மைக்கேல் தேவாலயம், அதிதூதர் மிக்கேலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மிக்கேலின் (செப்டம்பர் 29) மற்றும் நோசா சென்ஹோரா அட்வோகடா (ஜனவரி இரண்டாவது வாரம்) ஆகியவற்றின் விருந்துகளை கொண்டாடுகிறது. திருச்சபையில் மூன்று பெரிய தேவாலயங்கள் உள்ளன: ஒன்று அதிதூதர் அன்டோனியோ (பிரியாஸ்), நோசா சென்ஹோரா டி சௌட் (மசால்வாடோ), மற்றும் நோசா சென்ஹோரா டி பைடேட் (கிராண்டே சின்வர்). வாகேட்டரில் உள்ள தேவாலயம் இருபதாம் நூற்றாண்டில் அதிதூதர் அன்டோனியோவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாகேட்டரின் புதிய திருச்சபையின் தேவாலயமாக மாறியது. வரலாறுகோவாவைப் போலவே, அஞ்சுனாவையும் போர்த்துகீசியர்கள் நீண்ட காலமாக தங்கள் வசம் வைத்திருந்தனர். 1950ஆம் ஆண்டில், இது 5,688 [2] என்ற மக்கள்தொகையைக் கொண்டிருந்தது, 2011இல் இது 9,636 ஆக இருந்தது. வரலாற்றாசிரியர் தெரசா அல்புகர்கி, கிராமத்தின் பெயர் அரபு வார்த்தையான 'ஹஞ்சுமான்' (வணிகர் சங்கம் என்று பொருள்) என்பதிலிருந்து உருவானதாக தெரிவிக்கிறார். மற்றவர்கள் இது "மாற்றம்" என்ற அரபு வார்த்தையிலிருந்து வந்தது என்று கூறுகிறார்கள் - மக்கள் பணத்தை மாற்றுவதற்காக கடலில் இருந்து அஞ்சுனாவுக்கு வருவது போல. இது 1960 களில் ஹிப்பிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பேக் பேக்கர்கள் மற்றும் டிரான்ஸ் இசைக் குழுக்களின் மையமாக இருந்தது. மேலும் சமீபத்தில் பெருநகர இளம் இந்தியர்களுக்கான பிரபலமான இடமாக மாறியுள்ளது. செயல்பாடுகள்சுற்றுலாப் பருவத்தில் (அக்டோபர் - ஏப்ரல்) அதன் கடற்கரையில் நடைபெறும் டிரான்ஸ் இசை விழாக்களுக்கு அஞ்சுனா பிரபலமானது. அஞ்சுனா புகழ்பெற்ற தெருச் சந்தையையும் (ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமையும்) நடத்துகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து வெளிநாட்டவர்களிடமிருந்தும், பழங்கள் முதல் நகைகள், உடைகள், போதைப் பொருள், மின்னணு சாதனங்கள் வரை விற்பனை செய்யப்படுகின்றன. புதன்கிழமைகளில், ஒரு நாள் சந்தையும் உள்ளது. இது காலையில் தொடங்கி இரவு 7:30 மணிக்கு முடிவடையும். மேலும், சனிக்கிழமைகளில் இரவு சந்தையும் உள்ளது. அஞ்சுனா கடற்கரை![]() அஞ்சுனா கடற்கரை கோவாவில் உள்ள ஒரு கடற்கரை ஆகும், [3] இது பனஜியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், வடக்கு கோவாவின் மப்பூசாவிற்கு மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது வடக்கு கோவாவின் பார்தேசு வட்டத்தில் அமைந்துள்ளது. அரபிக் கடலால் சூழப்பட்டுள்ள கோவாவின் மேற்கு கடற்கரையில் 30 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையின் ஒரு பகுதியாக இந்த கடற்கரை உள்ளது. [4] அஞ்சுனா கடற்கரைக்கு அருகிலுள்ள இடங்களில் அஞ்சுனா தெருச் சந்தை மற்றும் சப்போரா கோட்டை ஆகியவை அடங்கும். [5] புகைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia