அஞ்சு பாலாஅஞ்சு பாலா (Anju Bala)(பிறப்பு 6 செப்டம்பர் 1979) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 இந்திய பொதுத் தேர்தலிலிருந்து மிஸ்ரிக் தொகுதியின் மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். பாலா 2010-ல் தீவிர அரசியலில் ஈடுபட்டார். இவர் மல்லவன் தொகுதி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதனையடுத்து ஓராண்டிற்குப் பின்னர், மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தி மற்றும் சமசுகிருதத்தில் முதுகலைப் பட்டதாரியான அஞ்சு பாலவின் கணவர் கிருஷ்ண குமார் சிங் உத்தரப் பிரதேச சட்டப் பேரவையின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பிப்ரவரி 2022-ல் அவர் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.[1][2] இளமைஅஞ்சு பாலா 6 செப்டம்பர் 1979 அன்று ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் ரவீந்தர் நாத் மற்றும் திரிஷாலா தேவிக்கு மகளாகப் பிறந்தார்.[3] அஞ்சு பாலா பெற்றோர் இருவரும் சமர் சாதியைச் சேர்ந்தவர்கள்.[4] 2007-ல் ஜம்மு பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் முதுகலை கல்வியை அஞ்சு பாலா முடித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் பல்கலைக்கழகத்தில் இந்தியில் பட்டம் பெற்றார்.[5] அரசியல் வாழ்க்கைபாலா தனது கல்லூரி வாழ்க்கையில் ஈடுபட்டார். 2010-ல், அஞ்சு பாலா மல்லவன் தொகுதி பிரமுகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] தொகுதி பிரமுகர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும்படி தனது கணவர் தன்னை வற்புறுத்தியதாக அஞ்சு பாலா கூறினார்.[7] 2013ல் பாலா பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[6] 2014 இந்தியப் பொதுத் தேர்தலில், இவர் மிஸ்ரிக் தொகுதியில் போட்டியிட்டு, பகுஜன் சமாஜ் கட்சியின் அசோக் குமார் ராவத்தை 87,363 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[6][8][9] தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, தனது முதல் முன்னுரிமைகள், தனது தொகுதியில் வசிப்பவர்களுக்குத் தன்னைக் கிடைக்கச் செய்வது, புதிய சாலைகள் அமைப்பது மற்றும் தொடர்ந்து மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது என்று கூறினார்.[6] 26 பிப்ரவரி 2018 அன்று, சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா என்ற கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாலா தேஜிபூர் கிராமத்தைத் தத்தெடுத்தார். இவர் முன்பு சிஹோர்த்வார் ஷிகோ மற்றும் இஸ்லாம் நகர் கிராமங்களைத் தத்தெடுத்தார்.[10][11] பாலா நாடாளுமன்ற உறுப்பினராகக் காலத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர்ப் பகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ்₹17.5 கோடி (ஐஅ$2.0 மில்லியன்) 90.21% பயன்படுத்தினார்.[12] 22 மார்ச் 2019 அன்று, வரவிருந்த 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் கட்சி இவருக்குப் போட்டியிட வாய்ப்பினை வழங்கவில்லை.[13] பிப்ரவரி 2022-ல் அஞ்சு பாலா பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.[14][15] பசுக்களுக்கு எதிரான வன்முறையை இந்தியாவின் தேசிய விலங்காக ஆக்குவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று பாலா நம்புகிறார். ஆகத்து 2017-ல், மக்களவையில் இந்த நடவடிக்கையை அவர் கோரினார்.[16] பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பது இவரது கருத்தாகும். விவசாயத்தை ஊக்குவிப்பது வேலைகளை உருவாக்க உதவும் என்றும், கல்வி வறுமையைக் குறைக்கும்[6] மற்றும் இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டுவருவது என புதிய பாணி அரசியல் சிந்தனையை உருவாக்க உதவும் என்றும் இவர் நம்புகிறார்.[7] பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்த பாலா, இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு உதவும் என்று கருதுகிறார்.[17] சொந்த வாழ்க்கைபாலா உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிருட்டிண குமார் சிங்கை 26 சனவரி 2008 அன்று மணந்தார்.[3] பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினராக 2002 முதல் 2012 வரை உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் மல்லவன் தொகுதியை சிங் பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia