அடித்தளக் கல்![]() அடித்தளக் கல் (Foundation Stone; எபிரேயம்: אבן השתייה, எழுத்துப்பெயர்ப்பு: Even haShetiya) அல்லது பாறை (அரபு: صخرة எழுத்துப்பெயர்ப்பு: Sakhrah, எபிரேயம்: סלע எழுத்துப்பெயர்ப்பு: Sela) என்பது எருசலேமின் பாறைக் குவிமாடத்தில் இதயப்பகுதியில் அமைந்துள்ள பாறையின் பெயர் ஆகும். இது குத்தப்பட்ட கல் எனவும், பாறையின் கீழே செல்ல அக்கல்லின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள சிறிய துவாரத்தின் நிமித்தம் அழைக்கப்படுகிறது. இது யூதப் புனித இடமும், யூதப் பாரம்பரியத்தின்படி சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையிலான ஆன்மீக இணைப்பாகப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக யூதர்கள் இதன் பக்கமாக இருந்தபடியே செபம் செய்வர்கள். ஏனென்றால் எருசலேம் கோவிலின் மகா பரிசுத்த இடம் இருந்த இடமாக இது நம்பப்படுகிறது. இடம்தற்கால யூத கல்வியலாளர்கள் அடித்தளக் கல் நான்கு சாத்தியமான இடங்களைப் பட்டியலிட்டுள்ளனர்:[1]
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia