இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.
எபிரேயம் (עִבְרִית அல்லது עברית, இவ்ரித்) (/ˈhiːbruː/; עִבְרִית, Ivrit[ʔivˈʁit](கேட்கⓘ) (அ) [ʕivˈɾit](கேட்கⓘ)) ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு செமித்திய மொழியாகும். இது 9 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது.[5][6] கி.மு. 10ஆம் நூற்றாண்டில் பண்டைய எபிரேயம் பற்றிய குறிப்புகள் அறியப்படுகின்றன.[7] எபிரேயம் இசுரேல் நாட்டின் அரபுடன் சேர்த்து ஆட்சி மொழியாக விளங்குகிறது.
இசுரேலின் பெரும்பான்மையான மக்களான யூதர்களால் எபிரேயம் பேசப்படுகிறது. இவர்கள் ஆதியாகமத்தின்படி (32:28) யாக்கோபின் வழிவந்த இசுரயேலர்கள் எனப்படுகின்றனர். ஏறத்தாழ கிபி 2ம் நூற்றாண்டளவில் வழக்கற்று இருந்த எபிரேய மொழி மீண்டும் கிபி 19ம் நூற்றாண்டில் அசிகலா விழிப்புணர்வு (Haskalah) இயக்கம் வழி, மொழியியல் அறிஞர் எலியேசர் பென்-யெஃகுடாவின் (Eliezer Ben-Yehuda) பெருமுயற்சியால் மொழி வழக்கத்திற்கு வந்துள்ளது.[8][9]
பார் கோக்பா கிளர்ச்சிக்குப் பின்னர், கி.பி. 100-200 வரையிலான காலகட்டங்களில் எபிரேயம் தினசரி வழக்கு மொழியாக வழங்கப்பட்டது. ஆயினும் அராமியமும், கிரேக்கமும் உயர் அதிகாரிகள், புலம்பெயர்ந்தோரால் அதிகம் பேசப்பட்டது.[10]
தோராவும்(யூத விவிலியத்தின் முதல் ஐந்து புத்தகங்கள்) ஏனைய யூத விவிலிய நூல்களும் விவிலிய எபிரேய மொழியிலேயே எழுதப்பட்டன.
வரலாறு
எபிரேய மொழியானது கனானிய மொழி இனத்தைச் சேர்ந்தது. கனானிய மொழிகள் யாவும் வடமேற்கு செமித்திய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை.[11] ஆபிரகாம் பென்-யூசுஃபின் கூற்றுப்படி, "இசுரேலியப் பேரரசின் காலமான கி.மு.1200-586 ஆண்டுகளில் எபிரேயத்தின் மொழிப்பயன்பாடு தழைத்தோங்கி இருந்தது".[12] ஆனால், மொழியியல் அறிஞர்களைப் பொருத்தவரை, பண்டைய அராமேய மொழியே பெரும்பாலும் வழக்கத்திலிருந்ததாகவும், பாபிலோனிய நாடுகடத்தல் வரையிலும் எபிரேயம் வட்டார மொழியாகவே பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் கருதப்படுகிறது.
பழமைச்சின்னமாக பேச்சு வழக்கொழிந்த மொழியாகக் கருதப்பட்ட எபிரேயம் யூத மதத்தின் புனித மொழியாக மதவழிபாட்டில் இன்றளவும் தொடருகிறது. மேலும் 19 ஆம் நூற்றாண்டின் எபிரேய மீட்பு நடவடிக்கைகளால் உயிர்ப்பெற்றுள்ளது. நவீன எபிரேயம் 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் பாலத்தீனத்தில் ஆட்சி மொழியாக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு இசுரேலில் அரபு மொழியுடன் சேர்த்து எபிரேயம் ஆட்சி மொழியாக்கப்பட்டது. எபிரேயம் யூத விவிலியத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் அதன் மொழி வழக்கிற்கேற்ப வரலாற்றைக் கொண்டுள்ளது.
விவிலிய எபிரேயம்
பண்டைய விவிலிய எபிரேயம்
இதன் காலம் எருசலேமின் முடியாட்சிக்கும், பாபிலோனிய நாடுகடத்தப்பட்டதற்குமான இடைப்பட்ட காலமான கி.மு. 10 – 6 ஆம் நூற்றாண்டு ஆகும். பண்டைய விவிலிய எபிரேயமானது தனாக் எனும் (யூத) விவிலியத்திலுள்ள வரிகள் இதனைக் குறிக்கின்றன. பண்டைய விவிலிய எபிரேயத்தில் (பாலியோ எபிரேயம்) சாமாரியர்களின் எழுத்துருக்கள் பெரும்பாலாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
விவிலிய எபிரேயம்
விவிலிய எபிரேயத்தின் காலம் சுமார் கி.மு. 8 – 6 ஆம் நூற்றாண்டு ஆகும். இது பாபிலோனிய நாடுகடத்தப்பட்ட காலத்தைக் குறிக்கிறது. யூத விவிலியம் பெரும்பாலாக இவ்வெபிரேய மொழிநடையிலேயே இயற்றப்பட்டதாலும், இம்மொழிச்சான்றுகள் யூத விவிலியத்தை ஒத்திருப்பதினாலும் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
கடை விவிலிய எபிரேயம்
இதன் காலம் கி.மு. 5 – 3 ஆம் நூற்றாண்டு ஆகும். கடை விவிலிய எபிரேயம் பாரசீகர்களின் ஆக்கிரமிப்புடன் தொடர்புடையது. மேலும் பாரசீக எழுத்துருக்கள் எசுரா, நெகேமியா போன்ற யூத விவிலிய நூல்களில் காணப்பட்டன. பண்டைய விவிலியத்தை ஒத்திருந்த போதிலும் அராமை எழுத்து வடிவங்களும், சில அரசு சார்ந்த பயன்பாட்டு சொற்களும் கலந்து பயன்படுத்தப்பட்டன.
மத்திய எபிரேயம்
சாக்கடல் - எபிரேயம்
இதன் காலம் கி.மு. 3 ஆம் - கி.பி. 1 ஆம் நூற்றாண்டு ஆகும். எருசலேமில் இருந்த யூத கோயில் அழிப்பு, கிரேக்க, உரோமானிய பேரரசுகளின் தழைத்தோங்கிய காலத்துடன் தொடர்புடையது. சாக்கடல் ஒட்டிய நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களால் இவ்வெபிரேயம் பேசப்பட்டது.
மிசுனாயிக் எபிரேயம்
இதன் காலம் கி.பி. 1 முதல் 3 (அ) 4 ஆம் நூற்றாண்டு ஆகும். உரோமானியப்பேரரசின் கடைக்காலமாக இருந்தது. மேலும் இக்கால கட்டத்திலேயே யூத நூல்களான மிசுனா, தோசெஃப்தா, தால்மூத் ஆகியவை இயற்றப்பட்டன.
எபிரேய ஆய்வுகள்
2008 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின்படி எபிரேய மொழி சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.[13][14]
மொழிக்குடும்பம்
அல்போ கோடெகசு: 10 ஆம் நூற்றாண்டு விவிலேய எபிரெய சுட்டிக்காட்டி (யோசுவா 1: 1).
கிழக்கு செமித்தியம், மேற்கு செமித்தியம் ஆகியவை செமித்திய மொழிக்குடும்பங்களின் பிரதான பிரிவுகள். இங்கு தெற்கு செமித்திய மொழிகளை வகைப்படுத்துதல் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவுகிறது.
மேற்கு செமித்திய மொழிகள் மேலும், மத்திய செமித்திய மொழிகளாக பிரிக்கப்படுகின்றன. மத்திய செமித்திய மொழியே அரபு மொழியாகவும் வடமேற்கு செமித்தியம் மற்றும் கனானிய, அறமைக், உகரிதிக் மொழிகளாக மேலும் பகுக்கப்படுகின்றன.
கனானிய மொழியிலிருந்தே எபிரேய, பெலிசுதிய, ஏதோம், மோவாப், பொனிசிய மொழிகள் பகுக்கப்படுகின்றன.
1344ஆம் ஆண்டைய விவ்லிய எபிரேய கல்வெட்டு - கொச்சாங்கடி யூத செப ஆலயம், கொச்சி
இலக்கணம்
எபிரேய மொழியின் இலக்கணம் சற்றெ மாறுபட்டு பகுத்தாய்வு செய்து அறியப்படுவதாக உள்ளது. மேலும், வேற்றுமை உருபுகள், முன்-ஒட்டு, சொற்பிணைப்பு, பொருளறிதல் முறைமையில் சில குறைபாடுகளையும் கொண்டுள்ளது. இருப்பினும் வினைச்சொல், பெயர்ச்சொல் முதலியன ஒவ்வொரு முறைமையிலும் மாற்றம் கொண்டதாகவே உள்ளது. சான்றாக, "சுமிகுட்" எனப்படும் சொற்றொடர் சார்ந்த நிலையானது பெயர்ச்சொல் வேறுபாட்டில் உட்பிணைப்பு நிலை மொழியின் மரபு சார்ந்ததாகவே உள்ளது. "சுமிகுட்"டில் சுட்டப்படும் வார்த்தைகள் பெரும்பாலும் இணைப்புக் குறி கொண்டைவாயாகவே குறிப்பிடப்படுகின்றன.
எழுத்து முறை
நவீன எபிரேயம் 22 எழுத்துக்களைக் கொண்டது.
வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது.
எபிரேய மொழி - தற்போதைய நிலை
நவீன எபிரேய மொழி இசுரேல் நாட்டின் பிரதான அலுவல் மொழியாகும். 2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலகெங்கிலும் சுமார் 9 மில்லியன் மக்கள் எபிரேய மொழி பேசுகின்றனர்.[15] இவற்றுள் 7 மில்லியன் மக்கள் மிகத் துல்லியமாகவும் எபிரேயம் பேசுகின்றனர்.[16][17][18]
தற்போது 90% இசுரேலிய யூதர்கள் எபிரேய மொழியில் தேர்ந்தவர்களாக உள்ளனர். இவற்றுள் 70% வீதத்தினர் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாவர்.[19]
2013 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சராசரியாக 20 வயதுக்கு மேலுள்ளவர்களுள் 49 விழுக்காட்டினர் உருசிய, ஆங்கில,அரபு, பிரஞ்சு, ஈத்திசிய மொழிகளுடன் எபிரேயமும் அறிந்தவர்களாயிருந்தனர். 26% உருசிய யூதர்கள், 12% அரேபியர்கள் எபிரேயம் குறைவாக அறிந்தவர்களாகவோ அல்லது முற்றிலும் அறிந்திராதவர்களாகவோ இருந்தனர்.[20]
உலகமயமாக்கலினால் எபிரேய அகராதியிலிருந்த ஆங்கில வழக்குகள் நீக்கப்பட்டு செப்பனிடப்பட்டுள்ளன. எருசலேமில் உள்ள எபிரேய பல்கலைக்கழகத்தின் எபிரேய மொழி அகாதமியானது 2000 புதிய எபிரேய வார்த்தைகள் மூல எபிரேயத்திலிருந்து பெற்று ஆங்கில வார்த்தைகளுக்கு மாற்றாக பின்பற்ற வழிவகை செய்துள்ளது.
↑Meir, Irit; Sandler, Wendy (2013). A Language in Space: The Story of Israeli Sign Language.
↑Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Hebrewic". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
↑ 5.05.1Thompson, Irene (June 15, 2016). "Hebrew". About World Languages.
↑"If you couldn't speak Greek by say the time of early Christianity you couldn't get a job. You wouldn't get a good job. a professional job. You had to know Greek in addition to your own language. And so you were getting to a point where Jews...the Jewish community in say Egypt and large cities like Alexandria didn't know Hebrew anymore they only knew Greek. And so you need a Greek version in the synagogue." – Josheph Blankinsopp, Professor of Biblical Studies University of Notre Dame in A&E's Who Wrote the Bible
↑Ross, Allen P. Introducing Biblical Hebrew, Baker Academic, 2001.
↑אברהם בן יוסף ,מבוא לתולדות הלשון העברית (Avraham ben-Yosef, Introduction to the History of the Hebrew Language), page 38, אור-עם, Tel-Aviv, 1981.