அடோபி சிஸ்டம்ஸ்
அடோபி சிஸ்டம்ஸ் இன்கார்பரேட்டட் (Adobe Systems Inc.) என அழைக்கப்பட்ட அடோபி இன்க் (Adobe Inc.) நிறுவனம் கலிபோர்னியாவின் சான் ஜோஸில் அமைந்துள்ள ஒரு அமெரிக்க கணினி மென்பொருள் நிறுவனம் ஆகும். இது வலை வடிவமைப்பு கருவிகள், புகைப்பட கையாளுதல், திசையன் உருவாக்கம், ஒளி/ஒலி திருத்தங்கள், அலைபேசிப் பயன்பாட்டு மேம்பாடு, அச்சுத் தளவமைப்பு மற்றும் அசைவூட்ட மென்பொருள் முதலான பரந்த அளவிலான நிரல்களை வழங்குகிறது. வரைகலை, புகைப்படம் எடுத்தல், விளக்கப்படம், அசைபடங்கள், பல்லூடகம்/ காணொளி, திரைப்படங்கள் மற்றும் அச்சு உள்ளிட்ட பரந்த அளவிலான உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கும் வெளியிடுவதற்கும் மென்பொருளில் இது வரலாற்று ரீதியாக நிபுணத்துவம் பெற்றுள்ளது. அதன் முதன்மை தயாரிப்புகளில் அடோபி போட்டோசாப் படத் தொகுப்பு மென்பொருள், அடோபி திசையன் அடிப்படையிலான விளக்கப்பட மென்பொருள், அடோப் அக்ரோபேத் ரீடர் மற்றும் கையடக்க ஆவண வடிவமைப்பு (பி.டி.எப்) மற்றும் முதன்மையாக ஒலிக்காட்சி உள்ளடக்கத்தை உருவாக்குதல், திருத்துதல் மற்றும் வெளியிடுவதற்கான பல கருவிகள் ஆகியவை இதில் அடங்கும். அடோப்நிறுவனம் அடோப் கிரியேட்டிவ் சூட் என்ற பெயரில் அதன் தயாரிப்புகளின் தொகுப்பை வழங்குகிறது. இது அடோப் கிரியேட்டிவ் கிளவுட் என்ற பெயரில் ஒரு சேவைச்சலுகையாக, சந்தா மென்பொருளாக உருவாக்கப்பட்டது (SaaS).[2] பல்லூடகம் மற்றும் படைப்பாக்க மென்பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இந்த நிறுவனம் சமீபகாலமாக இணையதள பயன்பாட்டு மென்பொருள் உருவாக்கத்தில் சிறப்பான வகையில் ஈடுபட்டு வருகிறது., மேலும் 2021 ஆம் ஆண்டில் வாடிக்கையாளர் அனுபவ மேலாண்மையில் (சிஎக்ஸ்எம்) சிறந்த உலகளாவிய தலைவதலைமைத்துவம் பெற்ற ஒன்றாகவும் கருதப்பட்டது.[3] அடோப் டிசம்பர் 1982 இல் ஜான் வார்னாக் மற்றும் சார்லஸ் கெஷ்கே ஆகியோரால் நிறுவப்பட்டது.[4] அவர்கள் ஜெராக்ஸ் பராக் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பின்னர் பின்குறிப்பு பக்கவிளக்க மொழி என்ற கணினி மொழியை(போஸ்ட்ஸ்கிரிப்ட்) உருவாக்கி விற்பனை செய்தனர். 1985 ஆம் ஆண்டில், ஆப்பிள் கம்ப்யூட்டர் அதன் ஊடொளி இயக்கியை அச்சுப்பொறிகளில் பயன்படுத்த போஸ்ட்ஸ்கிரிப்டை உரிமம் பெற்றது, இது மேசைக்கணினி வெளியீட்டு புரட்சியைத் தூண்ட உதவியது.[5] அடோப் பின்னர் மேக்ரோமீடியாவை கையகப்படுத்துவதன் மூலம் அசைபடம், பல்லூடக மென்பொருளை உருவாக்கியது, அதிலிருந்து மேக்ரோமீடியா விளாசு, அடோப் பிரீமியர் ப்ரோ என்றழைக்கப்படும் அடோப் பிரீமியர் மூலம் காணொளிகளைத் தொகுக்கும் மென்பொருள், அடோப் மியூசியுடன் குறைந்த குறியீடு வலை மேம்பாடு, மற்றும் மின்னணுச் சந்தை மேலாண்மைக்கான மென்பொருள் தொகுப்பு ஆகியவற்றை விரிவாக்கம் செய்தது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, அடோப் உலகளவில் 26,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது.[4] அடோப், மாசாசூசெட்ஸ், நியூயார்க் நகரம், ஆர்டன் ஹில்ஸ், லெஹி, சியாட்டில், ஆஸ்டின் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களில் அமெரிக்காவில் முக்கிய மேம்பாட்டு நடவடிக்கைகளை கொண்டுள்ளது.[6] இது இந்தியாவின் நொய்டா மற்றும் பெங்களூரிலும் பெரிய வளர்ச்சி நடவடிக்கைகளையும் கொண்டுள்ளது.[7] அடோப் நிறுவனம் வெளியிட்ட கிரியேட்டிவ் கிளவுட் சந்தா விலைநிணயத்திற்கு மாறியது. மேலும் விளம்பரப்படுத்தப்பட்ட கிரியேட்டிவ் க்ளவுட் திட்டத்திற்கான முன்னரே செலுத்த வேண்டிய சந்தாக் கட்டணங்கள், அதன் கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றின் மீது விமர்சனங்களை வந்த போதிலும், இந்நிறுவனம் வடிவமைப்பு மற்றும் ஆக்கபூர்வமான மென்பொருளில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தும் தொழில்நுட்ப நிறுவனமாக இருந்து வருகிறது, அதன் மிகவும் ஊக்குவிக்கப்பட்ட கிரியேட்டிவ்கிளவுட் திட்டத்திற்கான விலகல் கட்டணம் குறித்து , 2024 இல் அமெரிக்க கூட்டாட்சி வர்த்தக ஆணையம், அமெரிக்க நீதித்துறை ஆகியவை கூட்டாக ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தது. .[8] வரலாறு.![]() ![]() அடோப் நிறுவனமானது முதலி ஜான் வார்னாக்கின் கார்கள் பழுதுபார்க்கும் கொட்டகையில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. அடோப் என்ற பெயரானது கலிபோர்னியாவின் லாஸ் அல்டாசில் உள்ள அடோப் க்ரீக் என்ற சிற்றோடையால் அப்பெயரைப் பெற்றது. அங்கு காணப்படும் ஓர் களிமண் வகையால் அதற்கு அப்பெயர் வழங்கப்பட்டது. இது ஓர் எசுப்பானிய ச் சொல்லாகும். அடோப் நிறுவனத்தின் வனிகச் சின்னத்தில் உள்ள "A" என்ற எழுத்தானது புதியபாணியில், வார்னாக்கின் மனைவியும் வரைகலை நிபுணருமான மார்வா வார்னாக்கால் உருவாக்கப்பட்டது. 1982 இல் மைக்ரோ சாப்ட் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் ஐந்து மில்லியன் அமெரிக்க டாலருக்கு இந்நிறுவனத்தை வாங்க முயன்றார். ஆனால் வார்னாக்கும் கேஷ்கேவும் மறுத்துவிட்டனர். ஆயினும் நிறுவன முதலீட்டாளர்கள் ஸ்டீவ் ஜாப்சுடன் எப்படியாவது வனிகத் தொடர்பு கொள்ள வலியுறுத்தினர். எனவே நிறுவனத்தில் 19 விழுக்காடு பங்குகளை அவருக்கு விற்க இருவரும் முன்வந்தனர். அன்றைய அடோப் நிறுவனத்தின் மதிப்பைவிட ஐந்துமடங்கு அதிகமான தொகையை ஸ்டீவ் ஜாப்ஸ் வழங்கினார். மேலும் போஸ்ட் ஸ்கிரிப் மென்பொருளுக்கான ஐந்தாண்டு உரிமைத்தொகையும் முன்கூட்டியே செலுத்தினார். இந்த வனிகமானது சிலிக்கன் வேலிப்பள்ளத்தாக்கின் வரலாற்றிலேயே, தொடங்கிய முதல் வருடத்திலேயே மிக அதிக இலாபம் ஈட்டிய முதல் நிறுவனமாக அடோபை மாற்றியது. வார்னாக் மற்றும் கெஷ்கே ஆகியோர் நகல் சேவை வணிகம் மற்றும் அலுவலக அச்சிடலுக்கான டர்ன் கீ அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வணிக விருப்பங்களை கருத்தில் கொண்டனர். பின்னர் அவர்கள் சிறப்பு அச்சிடும் மென்பொருளை உருவாக்குவதில் கவனம் செலுத்தத் தேர்ந்தெடுத்து, அடோப் போஸ்ட்ஸ்கிரிப்ட் பக்க விளக்க மொழியை உருவாக்கினர்.[9] நிறுவன நிகழ்வுகள்1992
1999
2003
2004
2005
2007
2008
2009
2010
போஸ்ட்ஸ்கிரிப்ட் (1982-1986)பல மொழிகளின் எழுத்து வடிவங்களை விவரிக்கும் வழிமுறைகளை உள்ளடக்கியதால் கணினி அச்சிடலுக்கான முதல் சர்வதேச தரநிலை வாந்த மென்பொருளாக போஸ்ட்ஸ்கிரிப்ட் இருந்தது. அடோப் 1988 இல் காஞ்சி அச்சுப்பொறித் தயாரிப்புகளைச் சேர்த்தது.[21] வார்னாக் மற்றும் கெஷ்கே ஆகியோர் அச்சுக்கலப்பு உற்பத்தியாளருடன் இணைவதன் மூலம் போஸ்ட்ஸ்கிரிப்ட்டின் நம்பகத்தன்மையை அதிகரிக்க முடிந்தது. ஆனால் கணினி வரைபட எழுத்துருவுடன் (கம்ப்யூகிராஃப்) போஸ்ட்ஸ்கிரிப்ட் இணைந்து வேலை செய்ய முடியவில்லை, ஆனால் பின்னர் ஹெல்வெட்டிகா மற்றும் டைம்ஸ் ரோமன் எழுத்துருக்களுக்கு உரிமம் பெற லினோடைப் உதவியது (லினோட்ரான் 100 மூலம்).[22] 1987 வாக்கில், 400 க்கும் மேற்பட்ட மூன்றாம் தரப்பு மென்பொருள் நிரல்கள், 19 அச்சுப்பொறி நிறுவனங்களுடன் உரிம ஒப்பந்தங்களுடன் தொழில்துறையின் தரமான அச்சுப்பொறி மொழியாக போஸ்ட்ஸ்கிரிப்ட் மாறியது.[9]
படைப்பு மென்பொருள் (1986-1996) அறிமுகம்![]() ஆப்பிள் மேகிண்டோசிற்கான திசையன் அடிப்படையிலான வரைதல் நிரலான அடோப் இல்லஸ்ட்ரேட்டரை உருவாக்கியதன் மூலமாக, 1980 களின் நடுப்பகுதியில் நுகர்வோர் மென்பொருள் சந்தையில் அடோப் நுழைந்தது. நிறுவனத்தின் சொந்த எழுத்துரு மேம்பாட்டு மென்பொருளிலிருந்து வளர்ந்த இல்லஸ்ட்ரேட்டர், போஸ்ட்ஸ்கிரிப்ட்டால் இயக்கப்பட்ட ஊடொளி அச்சுப்பொறிகளைப் பிரபலப்படுத்த உதவியது. 1990 களின் நடுப்பகுதியில், அடோப் நிறுவனம் ப்ரேம் டெக்னாலஜி கார்ப்பரேஷனின் ஜான் மற்றும் தாமஸ் நோல் ஆகியோரிடமிருந்து போட்டோசாப், பிரேம் மேக்கர் ஆகியவற்றையும், ஆல்டஸ் நிறுவனத்தில் இருந்து ஆப்டர் எபெக்ட், பேஜ்மேக்கர் ஆகிய மென்பொருள்களை உருவாக்கியது அல்லது வாங்கியது. மேலும் அத்துடன் பின்னர் பிரீமியர் புரோ என்று அழைக்கப்பட்ட அடோப் பிரீமியரையும் 1991 இன் தொடக்கத்தில் வெளியிட்டது.[23][24][25] ஆகஸ்ட் 1986 இல் இல்லஸ்ட்ரேட்டர் வளர்ச்சியடைந்த அதே நேரத்தில், அடோப் நாஸ்டாக் கலப்பு குறியீட்டில் கால் பதித்தது.[26] கையடக்க ஆவணப் படிவம் (pdf) மற்றும் கோப்பு வடிவங்கள் (1993-1999)1993 ஆம் ஆண்டில், அடோப் நிறுவனம் அடோப் அக்ரோபத், ரீடர் ஆகிய மென்பொருள்களையும். கையடக்க ஆவண படிவத்தையும் அறிமுகப்படுத்தியது, இது பொதுவாக பி.டி.எஃப் எனச் சுருக்கப்பட்டது, வார்னாக் முதலில் இதனை "தி கேமிலாட் ப்ராஜெக்ட்" என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கினார், போஸ்ட்ஸ்கிரிப்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரவலாக கிடைக்கக்கூடிய மின்னணு ஆவண வடிவமைப்பை உருவாக்கி, உரை, பின்னல் வரைகலை(பிக்சல் அடிப்படையானது), திசையன் வரைகலை, எழுத்துருக்கள் ஆகியவற்றை காண்பிக்க முடியும். அடோப் அதன் தொடக்கத்திலிருந்து 2008 வரை பி டி எஃபை ஐ ஒரு தனியுரிமக் கோப்பு வடிவமாக வைத்திருந்தது, பின்னர் எஸ். ஓ எண் ஐ. எஸ்ஓ 32000-1:2008 இன் கீழ் ஒரு ஐ. எஸ் ஓ சர்வதேசத் தரத்திற்கு மாறியது, இருப்பினும் இந்தக் கோப்பு வடிவம் அதன் அறிமுகத்திலிருந்தே பார்வையாளர்களுக்கு இலவசமாகவே தான் இருந்தது.[27][28] ஆல்டசிடமிருந்து பேஜ்மேக்கர் மற்றும் ஆப்டர் எபெக்ட்ஸ் ஆகியவற்றைப் பெற்றதோடு, ஆல்டஸை கையகப்படுத்தியதன் மூலம், அடோப் படங்களுக்கான டிஃப் (TIFF) கோப்பு வடிவத்தின் மீது கட்டுப்பாட்டைப் பெற்றது.[29] கிரியேட்டிவ் சூட் மற்றும் மேக்ரோமீடியா கையகப்படுத்தல் (2000-2009)2000 ங்களில் இந்நிறுவனம் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டது. இந்த பத்தாண்டுகளில் பல கையகப்படுத்தல்களை அடோப் நிறுவனம் மேற்கொண்டது அதன் முதல் குறிப்பிடத்தக்க கையகப்படுத்தல் 2002 இல் தொடங்கியது. அப்போது அடோப் கனேடிய நிறுவனமான ஜெட்ஃபர்ம் என்றும் அழைக்கப்படும் அக்ஸெலியோவை வாங்கியது.[30] மே 2003 இல், சிண்ட்ரிலியம் சாப்ட்வேர் நிறுவனத்திடமிருந்து 16 மில்லியன் டாலர்களுக்கு ஒலித் தொகுப்பு (ஆடியோ எடிட்டிங்) மற்றும் ஒருங்கிணைந்த ஒலிப்பதிவு (மல்டிட்ராக் ரெக்கார்டிங் ) மென்பொருளான கூல் எடிட் ப்ரோவை வாங்கியது, அத்துடன் "லூபாலஜி" என்ற பெரிய வளைய நூலகத்தையும் வாங்கியது.[31] அடோப் பின்னர் கூல் எடிட் ப்ரோவுக்கு அடோப் ஆடிஷன் என்று மறுபெயரிட்டது. 2003 ஆம் ஆண்டில் நிறுவனம் அடோப் கிரியேட்டிவ் சூட்டின் முதல் பதிப்பை அறிமுகப்படுத்தியது, அதன் உருவாக்கமானது, அதன் அனைத்து மென்பொருள்களையும் ஒரே தொகுப்பாக இணைத்தது. கிரியேட்டிவ் சூட்டின் முதல் பதிப்பானது, இன்டெசைன் (பேஜ் மேக்கரின் அடுத்த வாரிசு) இல்லஸ்ட்ரேட்டர், போட்டோசாப், இமேஜ் ரெடி மற்றும் இன்காபி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. 2005 இல் கிரியேட்டீவ் சூட்டின் இரண்டாவது பதிப்பில் அடோப் அக்ரோபத், பிரீமியர் புரோ, கோலிவ், கோப்பு மேலாளர், அடோப் பிரிட்ஜ் மற்றும் அடோப் ட்ரீம் வீவர் ஆகியவற்றின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பும் இணைந்தது. குறிப்பாக மைக்ரோமீடியாவுடன் இணைந்து 3.4 பில்லியன் டாலர் கையகப்படுத்தியன் மூலம் அடோப் ட்ரீம் வீவர் வாங்கப்பட்டது.[32][33] ட்ரீம்வீவரைக் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல், மேக்ரோமீடியாவைக் கையகப்படுத்தல், $3.4 பில்லியன் பங்கு மாற்றமாக முடிக்கப்பட்டது, கோல்ட்பியூஷன், பங்களிப்பு, கேப்டிவேட், ப்ரீஸ் (அடோப் கனெக்ட் என்பதன் மறுபெயர்) டைரக்டர், பையர் வொர்க்சு, அடோபி விளாசு, விளாசு பேப்பர், அப்பாச்சி விளெக்சு, ப்ரீஹேண்ட், ஹோம்சைட், ஜேரன், பிரெசண்டர் மற்றும் ஆதர்வேர் மென்பொருள் ஆகியவை அடோப்பின் தயாரிப்பு வரிசையில் சேர்க்கப்பட்டது.[34] ஏப்ரல் 2008 இல், அடோப் ஊடக இயக்கியை (மீடியா பிளேயர்) வெளியிட்டது. ஏப்ரல் 27 அன்று, டிரீம்வீவருக்கு ஆதரவாக அதன் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு அடோப் அதன் பழைய மீயுரைக் குறியீட்டு மொழி /வலை மேம்பாட்டு மென்பொருளான கோ லைவ்- இன் வளர்ச்சி மற்றும் விற்பனையை நிறுத்தியது. அடோப் கோ லைவ் பயனர்களுக்கு ட்ரீம்வீவர் மீது தள்ளுபடியை வழங்கியது. மேலும் இணையப்பயிற்சிகள், இடப்பெயர்வு உதவியுடன் கோ லைவை இன்னும் பயன்படுத்துபவர்களை ஆதரிக்கிறது. ஜூன் 1 அன்று, அடோப் கூட்டுப்பணிகளுக்கான தொடர்ச்சியான வலைப் பயன்பாடுகளான அக்ரோபத் டாட் காமை அறிமுகப்படுத்தியது.[13] வடிவமைப்பு, வலை, முதலானவற்றை உள்ளடக்கிய கிரியேட்டிவ் சூட் 4, அக்டோபர் 2008 இல் ஆறு உள்ளமைவுகளில் சுமார் US $1,700 முதல் $2,500 வரை விலையில் அல்லது தனிப்பட்ட பயன்பாட்டின் மூலம் வெளியிடப்பட்டது.[35][15] போட்டோசாப்பின் விண்டோஸ் பதிப்பில் 64-பிட் செயலாக்கம் உள்ளது.[36] டிசம்பர் 3,2008 அன்று, அடோப் நிறுவனம் தனது 600 ஊழியர்களை (உலகளாவிய ஊழியர்களில் 8%) பலவீனமான பொருளாதார சூழலை காரணம் காட்டி பணிநீக்கம் செய்தது. செப்டம்பர் 15,2009 அன்று, அடோப் சிஸ்டம்ஸ் இணையச் சந்தை மற்றும் வலைப்பகுப்பாய்வு நிறுவனமான ஓம்னிச்சரை 1.8 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக அறிவித்தது.[37] இந்த ஒப்பந்தம் அக்டோபர் 23,2009 அன்று நிறைவடைந்தது.[38] ஓம்னிச்சர் நிறுவனத்தின் முன்னாள் தயாரிப்புகள் அடோப் மார்க்கெட்டிங் கிளவுடுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.[39] நவம்பர் 10,2009 அன்று, நிறுவனம் மேலும் 680 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.[40] அடோபி விளாசு முடிவு, பாதுகாப்பு மீறல் மற்றும் பணியாளர் இழப்பீடு வகுப்பு நடவடிக்கை (2010-2014)![]() 2010 ஆம் ஆண்டு அடோப் நிறுவனத்திற்கு சர்ச்சைகள் நிறைந்ததா அமைந்தது. ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ஐபோன், ஐபாட் மற்றும் பிற தயாரிப்புகளில் அடோப் பிளாசுக்கு ஆதரவளிக்காதது குறித்து ஆப்பிள் நிறுவனத்துடன் தொடர்ந்து வாதங்கள் செய்யப்பட்டன.[41] முன்னாள் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் பிளாஷ் போதுமான நம்பகத்தன்மை உடையதோ, பாதுகாப்பானதோ அல்ல என்று கூறினார், அதே நேரத்தில் அடோப் நிர்வாகிகள் ஆப்பிள் iOS இயங்குதளத்தின் மீது கட்டுப்பாட்டை பராமரிக்க விரும்புவதாக வாதிட்டனர். ஏப்ரல் 2010 இல், ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு இடுகையை வெளியிட்டார் அதில் ப்ளாஷ் பற்றிய எண்ணங்கள் என்ற தலைப்பில் அங்கு அவர் ஃப்ளாஷைப் பற்றிய தனது எண்ணங்களையும் ஹெச் டி எம் எல்-5 இன் எழுச்சியையும் கோடிட்டுக் காட்டினார்.[42] அடோப் ஜூலை 2010 இல், டே சாப்ட்வேரை வாங்கியது, அவற்றின் சி.க்யூ முதலான பல தயாரிப்புகள், அலைபேசி ஆகியவற்றை அடோப் ஒருங்கிணைத்தது.[43][44][45][46][47] ஜனவரி 2011 இல், அடோப் டெம்டெக்ஸின் பார்வையாளர்-உகப்பாக்க மென்பொருளை அதன் இணையச் சந்தைத் தொகுப்பில் சேர்க்கும் நோக்கத்துடன் டெம்டெக்ஸ் இன்க் நிறுவனத்தை கையகப்படுத்தியது.[48] 2011 இல், போட்டோசாப் வேர்ல்ட் என்ற ஒரு புதிய அலைபேசிப் புகைப்படச் சேவையை அடோப் வெளியிட்டது.[49] கரோசல் என்பது ஐபோன், ஐபாட் மற்றும் மேக் கணினிக்கான ஒரு புதிய பயன்பாடாகும். இது போட்டோசாப் லைட்ரூம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனர்கள் அனைத்து தளங்களிலும் படங்களை சரிசெய்யவும் நன்றாக ட்யூன் செய்யவும் அனுமதிக்கிறது.[50] புகைப்படங்களை தானாகவே ஒத்திசைக்கவும், பகிரவும், உலாவவும் பயனர்களை கரோசல் அனுமதித்தது.[50] இந்த சேவை பின்னர் "அடோப் ரிவெல்" என்று மறுபெயரிடப்பட்டது.[51] அதே ஆண்டு அக்டோபரில், போன் கேப் என்ற அலைபேசி பயன்பாட்டு மேம்பாட்டு கட்டமைப்பை உருவாக்கிய நிடோபி மென்பொருள் நிறுவனத்தை அடோப் வாங்கியது. கையகப்படுத்துதலின் ஒரு பகுதியாக, ஃபோன் கேப்பின் மூலக் குறியீடு ருள் அப்பாச்சி அறக்கட்டளைக்குச் சமர்ப்பிக்கப்பட்டது, அங்கு அது அப்பாச்சி கார்டோவா என ஆனது.[52] நவம்பர் 2011 இல், விளாசு பதிப்பு 11.1 ஐத் தொடர்ந்து அலைபேசிச் சாதனங்களுக்கான விளாசு வளர்ச்சியை நிறுத்துவதாக அறிவித்தது. அதற்கு பதிலாக, அலைபேசிச் சாதனங்களுக்கான ஹெச் டி எம் எல்-5 யில் அதிகக் கவனம் செலுத்தியது.[53] டிசம்பர் 2011 இல், அடோப் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள எஃபிசியன்ட் ஃபிரன்டியரை வாங்குவதற்கான உறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அறிவித்தது.[54] டிசம்பர் 2012 இல், அடோப் ஒரு புதிய 280,000 சதுர அடி (26,000 மீ 2) நிறுவன வளாகத்தை உட்டாவில் உள்ள லெகியில் திறந்தது.[55] 2013 ஆம் ஆண்டில், அடோப் ஒரு பெரிய பாதுகாப்பு மீறலை சந்தித்தது. நிறுவனத்தின் மென்பொருளுக்கான மூலக் குறியீட்டின் பரந்த பகுதிகள் திருடப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டன மேலும் அடோப்பின் வாடிக்கையாளர்களின் 150 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் பதிவிறக்கத்திற்கு உடனடியாக கிடைக்கச் செய்யப்பட்டன.[56][57] 2012 ஆம் ஆண்டில், அடோப் ஹேக் மூலம் சுமார் 40 மில்லியன் கட்டண அட்டை தகவல்கள் திருடப்பட்டன. 2013 ஆம் ஆண்டில் கலிபோர்னியா கூட்டாட்சி மாவட்ட நீதிமன்றத்தில் அடோப் மற்றும் மூன்று சிலிக்கான் பள்ளத்தாக்கை தளமாகக் கொண்ட அடோப் மற்றும் மற்ற மூன்று நிறுவனங்களுக்கு எதிராக, ஊழியர்களின் இழப்பீட்டை நிறுவனம் மறைத்ததாகக் குற்றம் சாட்டி, ஒரு வகுப்பு நடவடிக்கை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.[58] மே 2014 இல், அடோப், ஆப்பிள், கூகுள் மற்றும் இன்டெல் ஆகிய நான்கு நிறுவனங்கள், வழக்கைத் தீர்க்க நான்கு நிறுவனங்களின் 64,000 ஊழியர்களுடன், $324.5 மில்லியன் தொகையை செலுத்த ஒரு ஒப்பந்தத்தை எட்டியது தெரியவந்தது.[59] அடோப் கிரியேட்டிவ் கிளவுட் (2011 முதல்)2011 ஆம் ஆண்டில் நிறுவனம் முதன்முதலில் அடோப் கிரியேட்டிவ் கிளவுட் அறிமுகப்படுத்தியது, இதற்காக அதன் படைப்பு மென்பொருள் பயனர்களுக்கு ஆண்டுக்கு $600 சந்தா நியமித்தது. இதனால் படைப்பு நிபுணர்கள்ஒரு முறை செலுத்தும் நிரந்தர உரிம கட்டணத்தை விட $2000 க்கும் மேல் அதிகமாக தொகை செலுத்த வேண்டியிருருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய அதே நேரத்தில், கிரியேட்டிவ் சூட் 5 பதிப்புடன் இணைந்து கிரியேட்டிவ் கிளவுட் வெளிவந்தது. அடோபின் படைப்பு மென்பொருளைப் பயன்படுத்தும் பயனர்கள் கிரியேட்டிவ் சூட் 5 (CS5) க்கான நிரந்தர மற்றும் சந்தா விலைத் திட்டங்கள் தனிநபர்களுக்கு மட்டுமல்ல, வணிக நிறுவனங்களுக்கும் சாத்தியமற்றது என்று கூறினர். அதே போல் கிரியேட்டிவ் சூட் 6 க்கான தள்ளுபடியை CS5 பயன்படுத்தாத பயனர்களுக்கு நீட்டிக்க அடோப் மறுத்தது. அடோப் கிரியேட்டிவ் கிளவுட்டின் இந்த அறிவிப்பு சிஎன்இடி பத்திரிகையாளர்களிடமிருந்து மிகவும் கவர்ச்சிகரமான திட்டமாக நேர்மறையான வரவேற்பைப் பெற்றது, கிரியேட்டிவ் கிளவுட் முதன்முதலில் 2012 இல் வெளியிடப்பட்டாலும் பிற்கால சிஎன்ஈடி கணக்கெடுப்பு ஒன்று அதிக பயனர்கள் இதன் சந்தாவைப் பற்றி எதிர்மறையான கருத்தைக் கொண்டிருந்தனர் என்பதை நிரூபித்தது. கிரியேட்டிவ் கிளவுடுக்கான அசல் விலைத் திட்டம் முழு மென்பொருள் தொகுப்புக்கும் மாதத்திற்கு $75 ஆக இருந்தது, இருப்பினும் குறைந்தபட்சம் ஒரு வருட தொடர்ச்சியான சந்தாவுக்கு உறுதியளிக்க விரும்பும் பயனர்களுக்கு மாதாந்திர செலவை அடோப் $50 ஆகவும், ஒரு வருட காலத்திற்காவது தொடர்ந்து பயன்படுத்தும் உறுதிப்பாட்டுடன் உள்ள முன்னாள் சிஎஸ் பயனர்களுக்கு மாதத்திற்கு $30 ஆகவும் சந்தாவினைக் குறைத்தது.[60][61] 2013 ஆம் ஆண்டளவில், கிரியேட்டிவ் சூட்டின் ஆறாம் பதிப்பு மென்பொருளின் கடைசி பதிப்பாக இருக்கவேண்டும் என்று அடோப் முடிவு செய்தது, இது நிரந்தர உரிமம் விருப்பத்தின் மூலம் விற்கப்படும், மேலும் மே மாதத்தில் போட்டோசாப், இல்லஸ்ட்ரேட்டர் மற்றும் பிற அடோப் படைப்பு மென்பொருளின் சமீபத்திய பதிப்புகளைப் பெற கிரியேட்டீவ் கிளவுட் சந்தா செலுத்துவது மட்டுமே ஒரே வழியாக இருக்கும் என்றும் அறிவித்தது. அடோபின் மென்பொருள்களுக்கான கட்டாயச் சந்தா குறித்து எதிர்மறையான வரவேற்பு இருந்த போதும், கிரியேட்டிவ் கிளவுடுக்கு மாறிய வாடிக்கையாளர்கள் சிலரின் நேர்மறையான உறுதியளிக்கப்பட்ட சான்றுகள் காரணமாக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே 500,000 சந்தாதாரர்களை அடோப் ஈர்த்தது.[62] சந்தாவுக்கு மாறுவது கிரியேட்டிவ் கிளவுட் சேவைகளின் மென்பொருள் திருட்டைத் தடுக்கவில்லை. கிரியேட்டிவ் கிளவுடுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட போட்டோசாப்பின் முதல் பதிப்பு வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே, வலைத்தளமான தி பைரேட் பே எனப்படும் திருட்டு மென்பொருளை விநியோகிக்கப் பயன்படும் இணையதளத்தில் அடோப் போட்டோஷாப் சிசி 2013 இன் கிராக் செய்யப்பட்ட பதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன..[63][64] கையகப்படுத்தல்கள் மற்றும் பிக்மாவை வாங்குதலில் தோல்வி (2018-2023)மார்ச் 2018 இல், அடோப் உச்சி மாநாட்டில், அடோப் நிறுவனமும் என்விடியா நிறுவனமும் தங்கள் செயற்கை நுண்ணறிவு குறித்த கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக தாங்கள் இணைவதாக அறிவித்தன. என்விடியாவின் வரைகலை செயற்பகுதிகளையும் அடோப் சென்சீ செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆழமான கற்றல் கட்டமைப்பை நெறிப்படுத்த அவர்கள் திட்டமிட்டனர். அடோப் மற்றும் என்விடியா ஆகியவை ஜி. பி. யு வேகப்படுத்தலில் 10 ஆண்டுகளாக ஒத்துழைத்தன. இது சென்சீ-இயங்கும் அம்சங்களை உள்ளடக்கியது, சான்றாக தானியங்கி உதடு-ஒத்திசைவு மற்றும் போட்டோசாப் சிசி-யில் முகமறியும் தொகுப்பு, தானியங்கிப் பெயரிடல் முதலியன.[65] அடோப் மேலும் 2018 முதல் 2023 வரை தனது நேரத்தை கிரியேட்டிவ் கிளவுட் மற்றும் அடோப் எக்ஸ்பீரியன்ஸ் கிளவுட் ஆகிய இரண்டையும் விரிவாக்கவும் அதிக நிறுவனங்களை வாங்குவதிலும் செலவிட்டது, இவை அதன் வணிகத்தை அதிகரித்த ஒரு மென்பொருளகளின் தொகுப்பாகும். 2018 ஜூன் மாதத்தில், இணையவழிச் சேவை வழங்குநரான மெஜன்டோ காமர்சை, தனியார் பங்களிப்பு நிறுவனமான பெரிமாவிலிருந்து $1.6 பில்லியனுக்கும் வாங்கப்பட்டதும்,[66][67] அதே ஆண்டில் மார்கெட்டோ $4.75 பில்லியனுக்கும்,[68] 2019 இல் அலேகொரித்மிக் 160 மில்லியனுக்குக் குறைவாகவும்,[69][70] மேலும் 2020 டிசம்பரில் வொர்க்பிரண்ட் $1.5 பில்லியனுக்கு வாங்கப்பட்டதும் அடங்கும். [71] 2021 ஆம் ஆண்டில் அடோப் அதன் இணைய வனிகத் தளங்களில் ஷாப்பிஃபை நிறுவனத்துடன் போட்டியிடும் முயற்சியில் கடனட்டைகள் மற்றும் பேபால் இரண்டையும் ஏற்றுக்கொண்டு கட்டணச் சேவைகளையும் சேர்த்தது.[72] ஜூலை 2020 இல், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் நெருங்கியபோது, மென்பொருள் நிறுவனமான இந்த நிறுவனம் அதன் டிஜிட்டல் விளம்பர விற்பனை தளத்தில் அரசியல் விளம்பர அம்சங்களுக்கு தடை விதித்தது.[73] நவம்பர் 9, 2020 அன்று, சந்தைப்படுத்துதல் மென்பொருளான வொர்க்பிரண்டை கையகப்படுத்த, அடோப் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிடுவதாக அறிவித்தது. கையகப்படுத்தல் டிசம்பர் 2020 தொடக்கத்தில் நிறைவடைந்தது. ஆகஸ்ட் 19,2021 அன்று, முன்னணி கிளவுட் அடிப்படையிலான காணொளி ஒத்துழைப்பு தளமான பிரேம்.ஐஓ வை வாங்குவதற்கான உறுதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அடோப் அறிவித்தது. இந்த பரிமாற்றம் $1.275 பில்லியன் மதிப்புடையது.[74] அடோப் எக்ஸ். டிமென்பொருளுக்கான போட்டியாளரான பிக்மாவை கையகப்படுத்த 20 பில்லியன் டாலர் வழங்கப்படுவதாக அடோப் செப்டம்பர் 2022 இல் அறிவித்தது, இது இன்றுவரை வழங்கப்பட்ட அதன் கையகப்படுத்தலுக்கான மிகப்பெரிய தொகையாகும்.[75][76] ஏற்கனவே எக்ஸ். டி. உடன் வடிவமைப்பு மென்பொருள் சந்தையில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் அடோப், பிக்மாவையும் சொந்தமாக வைத்திருந்தால் அதிக கட்டுப்பாட்டைதானே கொண்டிருக்கும் என்ற கவலையின் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஒழுங்குமுறை ஆய்வு தொடங்கியது. பிக்மாவை வாங்குவதற்கான அறிவிப்பின் போது, படைப்பு மென்பொருள் சந்தை மற்றும் வடிவமைப்பு-மென்பொருள் சந்தையில் அடோப்பின் பங்கு கிட்டத்தட்ட ஒரு ஏகாந்த உரிமையாக இருந்தது.[77] 2023 டிசம்பரில், அடோப், பிக்மா ஆகிய இரு நிறுவனங்களும் ஒழுங்குமுறைச் சவால்களை மேற்கோள் காட்டி, தங்கள் இணைப்பு ஒப்பந்தத்தை நீக்கம் செய்தன. இந்த ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட வாய்ப்பில்லை என்பதற்கான அறிகுறியாக இது இருந்தது. இந்த இணைப்பு ஒப்பந்தத்தை நீக்கியதற்கான கட்டணமாக அடோப் பிக்மாவுக்கு 1 பில்லியன் செலுத்தியது.[78][79][80][81][82] எப் டி சி (FTC) வழக்கு மற்றும் சேவை விதிமுறைகள் புதுப்பிப்பு (2024-தற்போது வரை)ஜூன் 17,2024 அன்று, அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன் மற்றும் அமெரிக்க நீதித்துறை ஆகியவை இணைந்து அடோப் மீது, அதன் சந்தா வணிக மாதிரி நடைமுறைக்கு எதிராக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தன.[83] அதன் மறைக்கப்பட்ட சேவைநீக்கத்திற்கான கட்டணங்கள் மற்றும் நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிக விலையுயர்ந்த திட்டங்களை வாங்கும் கட்டாயத்திற்குத் தள்ளியதாகவும் அவை குற்றம் சட்டின ஜூன் 2024 இல், சேவை விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ததால் அடோப் ஓர் பின்னடைவை எதிர்கொண்டது. அதன் பிறகு அதன் செயற்கை நுண்ணாறிவு மாதிரிகளைப் பயிற்றுவிக்க வாடிக்கையாளர்களின் தரவைப் பயன்படுத்தாது என்று வெளிப்படையாக உறுதியளித்தது.[84] தலைமை நிர்வாகம்
தயாரிப்புகள்அடோப் நிறுவனம் பி.டி.எப், மற்றும் அதன் பின் வெளியீடுகளான போஸ்ட்ஸ்கிரிப்ட், ஆக்சன் ஸ்கிரிப்ட். சாக்வேவ் பிளாசு, பிளாசு வீடியோ, பிலிம்ஸ்டிரிப் ஆகிய படிவ அடிப்படை மென்பொருள்களையும், அசோப் கலர், போட்டோசாப் எக்ஸ்பிரசு, அக்ரோபாத் டாட் காம், பிகென்சு, அடோப் எக்ஸ்பிரசு ஆகிய வலைதளச் சேவைகளையும், அடோப் மீடியா என்கோடர், முதாலானவற்றையும் வெளியிட்டது அடோப் ஸ்டாக்2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, 2015 ஆம் ஆண்டில், 23 நாடுகளில் இணையதள அடிப்படையில் இயங்கி வந்த போட்டோலியா என்ற ஊடக நிறுவனத்தை அடோப் வாங்கியது.[86] இந்நிறுவனம் ஐம்பத்தேழு மில்லியனுக்கும் அதிகமான உயர் தெளிவுத்திறன், காப்புரிமை இல்லாத படங்கள் மற்றும் காணொளிகளை சந்தா அல்லது கடன் கொள்முதல் முறைகள் மூலம் உரிமத்திற்கு வழங்குகிறது. இது 2019 வரை ஒரு தனித்த வலைத்தளமாக இயக்கப்பட்டது, ஆனால் பின்னர் அடோப் ஸ்டாக்கில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.[86] அடோப் அனுபவ தளம்அடோப் அதன் "அடுத்த தலைமுறை" என்று அழைக்ப்படும்.[87]சென்சீ செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் கட்டமைப்பு ஆகியவற்றுடன் உள்ளடக்கம், மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர் உறவு மேலாண்மை தயாரிப்புகள் ஆகியவற்றின் ஓர் உறவுத் தளமே அடோப் அனுபவ தளமாகும். அடோப் இதனை மார்ச் 2019 இல் அறிமுகப்படுத்தியது.[87] நிதிசார் தகவல்1986 ஆம் ஆண்டில் அடோபி சிஸ்டம்ஸ் நாஸ்டாக்கில் நுழைந்தது. 2006 ஆம் ஆண்டில் அடோபிபின் வருமானம் $2.575 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்து மதிப்பீட்டின் படி, அடோபிபின் சந்தை முதலாக்கம் $23 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2008 மார்ச் நிலவரப்படி, அடோபிபின் சந்தை முதலாக்கம் தோராயமாக $18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.[26]
வருவாய்
அடோபின் நிதியாண்டு டிசம்பர் முதல் நவம்பர் வரை செல்லும். உதாரணமாக, 2007 ஆம் வருட நிதியாண்டு நவம்பர் 30, 2007 அன்று முடிவடைந்தது. பெருமைகள்1995 ஆம் ஆண்டில் பார்ச்சூன் இதழ் அடோபி நிறுவனத்தை பணியாற்ற மிக உன்னதமான இடமாக தனது கணக்கெடுப்பில் குறிப்பிட்டுள்ளது. பணியாற்ற சிறந்த அமெரிக்க நிறுவனங்கள் பட்டியலில் 2003 ஆம் ஆண்டில் ஐந்தாவது இடத்திலும், 2004 ஆம் ஆண்டில் ஆறாவது இடத்திலும், 2007 ஆம் ஆண்டில் முப்பத்தியொன்றாம் இடத்திலும், 2008 ஆம் ஆண்டில் நாற்பதாவது இடத்திலும், 2009 ஆம் ஆண்டில் பதினொன்றாவது இடத்திலும் அடோபி பட்டியலிடப்பட்டுள்ளது.[96] 2008 ஆம் ஆண்டு மே மாதத்தில், இந்தியாவில் உள்ள அடோபி சிஸ்டம்ஸ் இந்தியா, இந்தியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த இடங்களில் பத்தொன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.[97] 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கனடா நாட்டில் உள்ள அடோபி சிஸ்டம்ஸ் நிறுவனம், "கனடாவின் முன்னணி 100 தொழிலதிபர்களில்" ஒன்றாக மீடியாகார்ப் கனடா இன்க் அமைப்பால் பட்டியலிடப்பட்டது. இதனைப் பற்றிய அறிக்கை மெக்லீன் பத்திரிகையிலும் வெளிவந்தது. விமர்சனங்கள்விலை நிர்ணயம்அடோப் அதன் விலை நிர்ணய நடைமுறைகளுக்காக பலவாறு விமர்சிக்கப்பட்டுள்ளது, அதன் தயாரிப்புகளின் சில்லறை விலைகள் அமெரிக்கா அல்லாத நாடுகளில் இரு மடங்கு வரை உயர்வாக உள்ளன.[98][99][100] ஐரோப்பிய வாடிக்கையாளர்களுக்கு £1,000 அதிகமாக இருந்த கிரியேட்டிவ் சூட் 3 முதன்மைத் தொகுப்புக்கான விலையை அடோப் வெளிப்படுத்திய பின்னர், "நியாயமற்ற விலை நிர்ணயம்" என அது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் மனு வெளியிடப்பட்டு 10,000 பயனர்களால் கையெழுத்திடப்பட்டது.[101][102] ஜூன் 2009 இல், டாலருக்கு எதிரான பவுண்ட் பலவீனமடைந்த போதிலும், இங்கிலாந்தில் அதன் விலைகளை அடோப் நிறுவனம் பத்து விழுக்காடு அதிகரித்தது, மேலும் இங்கிலாந்து பயனர்கள் அமெரிக்க கடைகளிலிருந்து அடோபின் தயாரிப்புகளை வாங்க அனுமதிக்கப்படவில்லை.[103][104] அடோப்பின் ரீடர் மற்றும் ப்ளாஷ் நிரல்கள் "எல்லா காலத்திலும் மிகவும் வெறுக்கப்பட்ட பத்து நிரல்களின் வரிசியில் " டெக் ராடர் இதழால் பட்டியலிடப்பட்டன.[105] பாதுகாப்புஅடோப் ரீடர் போன்ற அடோப் நிரல்களில் உள்ள பாதிப்புகளை கொந்தர்கள் பயன்படுத்தி, கணினிகளுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்றுள்ளனர்.[106]அடோப்பின் பிளாசு ஊடக இயக்கி பிறவற்றின் செயல்திறன், நினைவகப் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு சிக்கல்களால் பாதிக்கப்பட்டது. இதற்காக அது விமரிசிக்கப்பட்டது. காஸ்பர்ஸ்கி ஆய்வகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை, அடோப் முதல் பத்து பாதுகாப்பு பாதிப்புகளைக் கொண்ட தயாரிப்புகளை தயாரிப்பதாக விமர்சித்தது. [2] கிரியேட்டிவ் சூட் 3 மென்பொருளில் உளவு மென்பொருளைச் சேர்த்து, ஆம்னிச்சர் என்ற நிறுவனத்திற்கு பயனர்களின் தரவுகளை யாருக்கும் தெரியாமல் அமைதியாக அனுப்புவதன் மூலமும் அடோப் தனது வாடிக்கையாளர்களை உளவு பார்த்ததாக பார்வையாளர்கள் குறிப்பிட்டனர்.[107] இதனைப் பயனர்கள் அறிந்ததும், சந்தேகத்திற்கிடமான அந்த உளவு மென்பொருள் என்ன செய்தது என்பதை அடோப் விளக்கியது. மேலும், பயனர்களின் "பாதுகாப்பு கவலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு சிறந்த வேலையைச் செய்ய முடியும், செய்ய வேண்டும்" என்றும் ஒப்புக்கொண்டது.[108] பின்னர் போட்டோசாப் சிஎஸ் 5 இல் ஒரு பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டபோது, அடோப் அந்த குறைபாட்டை பொருட்படுத்தாது என்று கூறி சீற்றத்தைத் தூண்டியது. மேலும் மென்பொருளை பாதுகாப்பாகப் பயன்படுத்த விரும்பும் எவரும் மேம்படுத்தலுக்குப் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறியது.[109] இதன் காரணமாக ஏற்பட்ட கடுமையான பின்னடைவைத் தொடர்ந்து அடோப் மென்பொருள் பாத்காப்புக்கான இணைப்பை வழங்க முடிவு செய்தது.[110] மூன்றாம் தரத்திலான உலாவி கருவிப்பட்டிகள், இலவச வைரஸ் வருடிகள் உள்ளிட்ட தேவையற்ற மென்பொருளை வாடிக்கையாளருக்குத் தள்ளியதற்காக அடோப் விமர்சிக்கப்பட்டது. பொதுவாகப பிளாஷ் புதுப்பிப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்ட மூன்றாம் தரமான ஸ்கேர்வேர் நிரலைத் தள்ளியதற்காக விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் பயனர்கள் தேவையில்லாமல் கணினி பழுதுபார்ப்புகளுக்கு பணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.[111][112] வாடிக்கையாளர் தரவு மீறல்அக்டோபர் 3, 2013 அன்று, நிறுவனம் தொடக்கத்தில் 2.9 மில்லியன் வாடிக்கையாளர்களின் மறைகுறியாக்கப்பட்ட கடனட்டைத் தகவல்கள் உட்பட முக்கியமான மற்றும் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பு மீறலில் திருடப்பட்டதை வெளிப்படுத்தியது.[113][114][115] செயல்பாட்டில் உள்ள 38 மில்லியன் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொந்தர்கள் பயனர்களின் அடையாளங்கள், மறைகுறியாக்கப்பட்ட கடவுச்சொற்கள் மற்றும் பல செயலற்ற அடோப் கணக்குகளுக்கான அணுகலைப் பெற்றதாக அடோப் பின்னர் ஒப்புக் கொண்டது.[116][117] 44 மாநிலங்களில் உள்ள தரவு தனியுரிமைச் சட்டங்கள் இந்தத் தகவலை மறைகுறியாக்க வேண்டும் என்று கோரினாலும், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் இயற்பியல் முகவரிகள் போன்ற அனைத்து தனிப்பட்ட தகவல்களும் மறைகுறியாக்கப்பட்டதா என்பதை நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை.[118][119]
பல கடனட்டைகள் கிரியேட்டிவ் கிளவுட் மென்பொருள் மூலம் சந்தா சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளன.[125] அடோப் தனது பாதிக்கப்பட்ட அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு கடன் கண்காணிப்பு சேவையில் இலவச உறுப்பினர்சேர்க்கையை வழங்கியது, ஆனால் அமெரிக்கா அல்லாத வாடிக்கையாளர்களுக்கு இதே போன்ற ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.[126][127] அமெரிக்காவில் தரவுப் பாதுகாப்பு மீறல் நிகழும்போது, நிறுவனம் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து அல்லாமல் பாதிக்கப்பட்டவர் வசிக்கும் மாநிலத்தைப் பொறுத்து அபராதஙகள் விதிக்கப்பட்டன. .[128] வாடிக்கையாளர்களின் தரவைத் திருடிய பிறகு, 2013 இல் சைபர் திருடர்கள் அடோப்பின் மூலக் குறியீடுக் களஞ்சியத்தையும் அணுகியுள்ளனர்.[129] அடோப் தனியுரிம தயாரிப்புகளின் மூலக் குறியீட்டின் நகல்களை கொந்தர்கள் பெற்றதால், அதன் பாதுகாப்பில் ஏதேனும் பலவீனங்கள் இருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து தரவுகளை எடுக்க முடியும் என்று கணினி நிபுணர்கள் எச்சரித்தனர்.[130] ஹோல்ட் செக்யூரிட்டியின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரியான ஆய்வாளர் அலெக்ஸ் ஹோல்டன், அடோபின் தரவுப் பாதுகாப்பு மீறலை வகைப்படுத்தினார். இது அக்ரோபாத், கோல்ட்பியூஷன் மற்றும் பல பயன்பாடுகளைப் பாதித்தது, இது "அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான ஒன்றாகும்".[131] போட்டோசாப் மூலக் குறியீட்டின் சில பகுதிகளை கொந்தர்கள் திருடியதாகவும் அடோப் அறிவித்தது, இது நிரலாளர்கள் அதன் பொறியியல் நுட்பங்களை நகலெடுக்க அனுமதிக்கும் என்றும், அடோப்பின் விலையுயர்ந்த தயாரிப்புகளைக் கொள்ளையடிப்பதை எளிதாக்கும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.[132][133] ரஷ்ய மொழி பேசும் ஒரு கொந்தர் குழுவின் இனைய சேவையகத்தில் [134] பாதுகாக்கப்பட்ட குறியாக்க வழிமுறைகள், பிற பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மென்பொருள் பாதிப்புகளை வெளிப்படுத்துவதன் மூலம் தனிநபர் மற்றும் நிறுவனத் தரவுகளுக்கான பாதுப்புகளை தகர்க்கமுடியும். மேலும் புதிய தலைமுறை பூச்சிய நாள் தாக்குதல்களுக்கான நுழைவாயிலாகவும் இது இருக்கும் என ஓர் செய்தி வெளியிடப்பட்டது. கொந்தர்கள் முன்பே பி. ஆர் நியூஸ்வையரின் வாடிக்கையாளர்களின் பயனர்பெயர்கள் மற்றும் மறைகுறியாக்கப்பட்ட கடவுச்சொற்களை பயன்படுத்தி மோசடி செய்ய கோல்ட்பியூஷனைப் பயன்படுத்தியுள்ளனர். இதுவும் அடோப் பாதுகாப்பு மீறலுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.[135] மேலும் வாஷிங்டன் மாநில நீதிமன்றத்தை மீறவும், 200,000 சமூக பாதுகாப்பு எண்களை அம்பலப்படுத்தவும் கோல்ட்பியூசனை கொந்தர்கள்பயன்படுத்தினர்.[136] போட்டி எதிர்ப்பு நடைமுறைகள்அடோப் வெளியிட்ட திசையன் வரைகலை திருத்தியான இல்லஸ்ட்ரேட்டருக்கு நேரடிப் போட்டியாக இருந்த, பிரீஹேன்ட் என்ற மென்பொருளை விற்பனை செய்த ஆல்டஸ் கார்ப்பரேஷனை 1994 ஆம் ஆண்டில் அடோப் கையகப்படுத்தியது.[137][138] ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) இதில் தலையிட்டு, பிரீஹேண்ட் மென்பொருளை மீண்டும் ஆல்டஸுக்கு விற்க கட்டாயப்படுத்தியது, மேலும் அடுத்த பத்தாண்டுகளுக்கு பிரீஹேண்ட் அல்லது இதே போன்ற எந்த திட்டத்தையும் அடோப் திரும்ப வாங்கத் தடை விதித்தது.[137][138] ஆல்ட்சிஸ் பின்னர் மேக்ரோமீடியாவால் வாங்கப்பட்டது, இது 5 முதல் 11 வரையிலான பதிப்புகளை வெளியிட்டது.[138] அடோப் டிசம்பர் 2005 இல் மேக்ரோமீடியாவை வாங்கிய பின்னர், 2007 இல் பிரீஹேண்டின் வளர்ச்சியை நிறுத்தியது, அம்மென்பொருள் வழக்கற்றுப் போனது.[137][139] பிரீஹேண்ட் மற்றும் இல்லஸ்ட்ரேட்டருடன், மேகிண்டோஷ் இயக்க முறைமைகளுக்கான, தொழில்முறை நிரல் சந்தையின் இரண்டு தயாரிப்புகளை மட்டுமே அடோப் கட்டுப்படுத்தியது.[137] 2011 ஆம் ஆண்டில், 5,000 பிரீஹேண்ட் வரைகலை நிபனர்கள் குழு ஒன்று கூடி, அடோப்பிற்கு எதிராக கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நம்பிக்கையின்மை குற்றம் சாட்டி குடிமை வழக்கைத் தாக்கல் செய்தனர்.[137][138][140][141] 2010ஆம் ஆண்டு நிலவரப்படி, அடோப் நிறுவனம் அதன் பிரீஹேண்ட் தயாரிப்பு பக்கத்தில், "பிரீஹேண்டிற்கு விசுவாசமான வாடிக்கையாளர் தளம் இருப்பதை நாங்கள் அங்கீகரிக்கும் அதே வேளையில், பவர்பிசி, மேக்ஸ் மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆகியவற்றை ஆதரிக்கும் புதிய அடோப் இல்லஸ்ட்ரேட்டர் சிஎஸ் 4 மென்பொருளுக்கு மாற பயனர்களை ஊக்குவிக்கிறோம். என்று தெரிவித்தது. அடோப்பின் மென்பொருள் எஃப்டிபி சேவையகத்தில் இன்னும் ப்ரீஹேண்டிற்கான கோப்பகம் உள்ளது, ஆனால் அது காலியாக உள்ளது.[142] இரத்து கட்டணம்ஏப்ரல் 2021 இல், அடோப் கிரியேட்டிவ் கிளவுட் சந்தாவுக்கு $291.45 விலகல் கட்டணம் வசூலிக்கப்பட்டதைக் காட்டும் ஒரு ட்வீட்டை ஒரு வாடிக்கையாளர் பகிர்ந்ததை அடுத்து, நிறுவனத்தின் ரத்து கட்டணம் குறித்து ட்விட்டர் பயனர்களிடமிருந்து அடோப் விமர்சனங்களைப் பெற்றது. பலர் அடோப் கிரியேட்டிவ் கிளவுட் க்கான தங்கள் ரத்து கட்டணத்தையும் காட்டினர். இதனால் அடோப் தயாரிப்புகள் திருடப்பட வாய்ப்புள்ளதாகவும், குறைந்த விலையில் மாற்று பொருட்களை வாங்குவது அல்லது அதற்கு பதிலாக இலவச மற்றும் திறந்த மூல மென்பொருளைப் பயன்படுத்த பயனர்கள் முனைவார்கள. எனவே சந்தாக்களை மாற்றுவதன் மூலம் இந்த கட்டணத்தை செலுத்துவதைத் தவிர்க்க முடியும் என்று அறிக்கைகள் வெளியிடப்பட்டன.[143][144] அமெரிக்க நீதித்துறை மற்றும் எஃப்டிசி ஆகியவை அடோப் மற்றும் அதன் இரண்டு நிர்வாகிகளுக்கு எதிராக ஜூன் 2024 இல் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தன, நிறுவனத்தின் ஏமாற்றும் சந்தா நடைமுறைகள் மற்றும் ரத்துசெய்தல் கொள்கைகள் ஆகியவற்றின் மறுசீரமைப்பு, இணைய வணிகர் நம்பிக்கை சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டின. வழக்கின் படி, நிறுவனம் குறைவான விளக்கங்கள், விருப்ப உள்ளீட்டு புலங்கள் மற்றும் சிக்கலான வலை இணைப்புகளைப் பயன்படுத்தி இரத்துக் கட்டணத்தை மறைத்தது. இந்த கட்டணம் முதல் ஆண்டின் தொடக்கத்தில் ரத்து செய்யத் தேர்ந்தெடுத்த பயனர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தங்களின் மதிப்பில் ஐம்பது சதவீதமாக இருந்தது, இதனால் அப்பயனர்களுக்கு அபராதஙகள் விதிக்கப்பட்டன. வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதன் மூலம் சேவைகளை ரத்து செய்ய முயன்ற வாடிக்கையாளர்கள், கைவிடப்பட்ட அழைப்புகள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான பலனில்லாத பரிமாற்றங்கள் உள்ளிட்ட தடைகளை எதிர்கொண்டனர். மற்றவர்கள் தங்கள் சந்தாக்களை வெற்றிகரமாக முடித்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தபோதும் அடோப்பால் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்பட்டனர்.[145][146][147][148] 2024 சேவை விதிமுறைகள் புதுப்பிப்புஜூன் 5, 2024 அன்று, அடோப் போட்டோசாப்பிற்கான தங்கள் சேவை விதிமுறைகளைப் புதுப்பித்தது. மேலும், "உள்ளடக்க மதிப்பாய்வு என்பது போல இந்தப் புதுப்பித்தலின் விளைவாக உங்கள் உள்ளடக்கங்களை எங்களால் கைமுறை மற்றும் தானியங்கி முறைகள் மூலம் அணுக இயலும் எனத் தெரிவித்தது. இது அடோப் பயனர்களிடையே சீற்றத்தைத் தூண்டியது, ஏனெனில் புதிய விதிமுறைகள் வாடிக்கையாளர்களின் பணியானது, வெளிப்படுத்த முடியாத ஒப்பந்தத்தின் (NDA) கீழ் இருந்தாலும் கூட, அடோப்பின் உருவாக்கமான செயற்கை நுண்ணறிவைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தப்படும் என்பதை இது குறிக்கிறது.[149][150] இதன் எதிர்விளைவாக அடுத்த நாள் அடோப் நிறுவனம், பயனரின் தரவைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவைப் பயிற்றுவிக்கவோ அல்லது பயனர்களின் வேலையை தாங்கள் சொந்தமாக எடுத்துக் கொள்ளவோ செய்யாது என்று தெளிவுபடுத்தியது. இருப்பினும், ஒரு வெளிப்படுத்த முடியாத ஒப்பந்தத்தின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலையைப் பார்க்கும் அல்லது பயன்படுத்தும் திறனை அடோப்பிற்கு வழங்கும் சேவை விதிமுறைகள் புதுப்பித்தலில் உள்ள பகுதியை வாடிக்கையாளர்கள் புறக்கணித்தனர்.[151] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia