அதுர்த்தி சுப்பா ராவ்
அதிருதி சுப்பா ராவ் (Adurthi Subba Rao) (16 திசம்பர் 1912 – அக்டோபர் 1 1975) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், திரைக்கதை ஆசிரியரும், படத் தொகுப்பாளரும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் பணியற்றியதற்காக நன்கு அறியப்படுகிறார். ராவ் இந்திய நாடகத் திரைப்படங்களின் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.[1][2] இவர் ஏழு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.[1][3] 1948ஆம் ஆண்டு இந்தியாவின் 39வது சர்வதேசத் திரைப்பட விழாவில் "தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் பொக்கிஷங்கள்" என்ற பிரிவில் காட்சிப்படுத்தப்பட்ட கல்பனா என்ற நடனத் திரைப்படத்தில் உதய் சங்கரின் கூட்டாளியாக ராவ் திரையுலகில் நுழைந்தார்.[4] 1960இல் வெளியான நம்மின பந்து என்ற திரைப்படம் நில உரிமையாளர்களால் விவசாயிகளை சுரண்டல் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழில் "பாட்டாளியின் வெற்றி" என்ற பெயரில் படமாக்கப்பட்டது. வெளியானதும் இரண்டு பதிப்புகளும் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றன. சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழாவில் தெலுங்குத் திரைப்படம் திரையிடப்பட்டது.[5] அந்த வருடத்தில் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் இந்தப் படம் வென்றது.[1][5][6] 1964 ஆம் ஆண்டு வெளிவந்த டாக்டர் சக்கரவர்த்தி என்ற திரைப்படம் கோடூரி கௌசல்யா தேவியின் சக்கரப்பிரமாணம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு தழுவி எடுக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டில் ஆந்திர அரசால் நிறுவப்பட்ட நந்தி விருதை வென்ற முதல் படமாக இது இருந்தது.[7] திரையரங்க வசூலில் பெற்ற வெற்றிக்குப் பிறகு அந்த ஆண்டிற்கான தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.[8] இவரது அடுத்த படைப்பு மூக மனசுலு, மறுபிறப்பு என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியத் திரைப்படங்களில் அரை-புனைகதை வகையின் முதல் வகை, கதை முழுவதும் பரந்த அளவிலான மனநிலையை ஊக்குவிக்கும் கூறுகளுடன் தீவிரமானதாக இருந்தது. இந்தப் படம் பின்னர், இந்தியில் மிலன் (1967) என்ற பெயரிலும், தமிழில் பிராப்தம் (1971) என்ற பெயரிலும் வெளி வந்தது. தெலுங்கு பதிப்புக்காக தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும், 1964இல் பிலிம்பேர் சிறந்த திரைப்பட விருதையும் (தெலுங்கு) பெற்றது. மேலும், கார்லோவி வேரி சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[9][10] 1968 ஆம் ஆண்டில், இவர் தனது படைப்பான சுடிகுண்டலுவில் நீதிமன்ற நடவடிக்கைகளையும், துப்பறிவுப் புனைவையும் பரிசோதித்தார். இந்த படம் தாஷ்கண்ட் மற்றும் மாஸ்கோ திரைப்பட விழாக்களில் "முக்கிய" கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக சிறப்பு குறிப்பு பெற்றது.[11][12] இந்த படம் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும், சிறந்த திரைப்படத்திற்கான நந்தி விருதையும், சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளது. அந்த வருடத்திற்கான இந்திய சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது.[12][13] ஆரம்ப வாழ்க்கையும், தொழிலும்இவர் சாத்தன்னா பந்துலு - ராஜலட்சுமியம்மா அகியோருக்கு 16 திசம்பர் 1912 இல் பிறந்தார். இவரது தந்தை ராஜமன்றியில் வட்டாசியராக இருந்தார். அதுர்த்தி சுப்பாராவ் தனது 14 வயதில் பள்ளி இறுதிப் படிப்பை ( மெட்ரிக் ) முடித்தார். காக்கிநாடா பி.ஆர் கல்லூரியில் தனது முன் பல்கலைக்கழகப் படிப்பில் சேர்ந்தார். பின்னர், மும்பை புனித சேவியர் கல்லூரியில் மூன்று வருட ஒளிப்படவியல் படிப்பில் சேர்ந்து, இரண்டு வருடத்திலேயே முடித்தார்.[1] தொழில்1957 ஆம் ஆண்டில் சரத் சந்திர சாட்டர்ஜியின் நிஷ்க்ருதி என்ற வங்காள மொழி புதினத்தைத் தழுவி, தெலுங்கில் தோடி கோடலு, என்ற பெயரிலும், தமிழில் "எங்க வீட்டு மகாலட்சுமி" (1957) எனவும் படமாக்கப்பட்டது. இரண்டு திரைப்படங்களும் ஒரே தாயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்டு ஒரே இயக்குநரால் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டன. மேலும் சில காட்சிகளும் கலைஞர்களும் இரண்டு பதிப்புகளிலும் ஒரே மாதிரியாக நடித்திருந்தார்கள். இந்தப் படம் தெலுங்கில் சிறந்த அம்சத்துக்கானத் திரைப்பட தகுதிச் சான்றிதழை வென்றது. 1959இல் பெங்காலியில் வெளிவந்த அக்னி பரிக்ஷா என்ற காதல் நாடகத் திரைப்படத்தைத் தழுவி தெலுங்கில் மாங்கல்ய பலம், என்ற பெயரிலும், தமிழில் மஞ்சள் மகிமை என்ற பெயரிலும் இயக்கினார். இரண்டு பதிப்புகளும் திரையரங்க வசூலில் வெற்றிகளைப் பெற்றன. 1960ஆம் ஆண்டில் தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் [14] மேலும் சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதையும் வென்றது. 1961 இல், இவர், கே. எஸ். கோபாலகிருஷ்ணனின் குமுதம் என்ற படத்தை இயக்கினார். இது தெலுங்கில் மஞ்சி மனசுலு (1962) என மறு ஆக்கம் செய்யப்பட்டது. குமுதம் 29 ஜூலை 1961 அன்று வெளியாகி திரையரங்கில் வணிக ரீதியான வெற்றி பெற்றது. இந்த படம் 9வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்றாவது சிறந்த திரைப்படத்திற்கான சான்றிதழ் பெற்றது. பின்னர், 1976இல் மகாகவி சேத்ரையாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எழுதி இயக்கினார்.[15][16] இந்தப் பணியின்போது ராவ் இறந்ததையடுத்து இயக்குநர் சி. எஸ். ராவ் மீதமுள்ள படப்பிடிப்பை முடித்தார்.[17] இவரது வாழ்க்கை வரலாற்றை மூத்த நடிகர் கிருட்டிணா வெளியிட்டார். அவர் சுப்பா ராவ் இயக்கத்தில் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.[18] பிரபல இயக்குநர் கே. விஸ்வநாத் பல ஆண்டுகளாக இவருடன் இணைந்து இயக்குநராக பணியாற்றியுள்ளார். தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபை இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக "அதுர்த்தி சுப்பா ராவ்" விருதை நிறுவியுள்ளது.[19] மேற்கோள்கள்
வெளி இணைப்புஅக்ள் |
Portal di Ensiklopedia Dunia