தெலுங்குத் திரைப்படத்துறை
தெலுங்கு திரைப்படத்துறை அல்லது டோலிவுட் என்பது இந்திய நாட்டில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா மாநிலங்களில் பரவலாக பேசப்படும் தெலுங்கு மொழித் திரைப்படத்துறை ஆகும். இது தெலங்காணாவை தலைநகராகிய ஐதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இது இந்தியத் திரைப்படத்துறையில் பெரிய மூன்று திரைத்துறையில் இதுவும் ஒன்றாகும். இந்த திரைத்துறை 2017 ஆம் ஆண்டில் 294 திரைப்படங்களைத் தயாரித்தது மற்றும் 2013 ஆம் ஆண்டில் இந்திய பாக்ஸ் ஆபிஸ் வருவாயில் 17% பங்கை வகித்தது. முதல் பேசும்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்குநர் எச்.எம் ரெட்டி இயக்கத்தில் காளிதாஸ் என்ற திரைப்படம் இரு மொழிகளிலும் 31 அக்டோபர் 1931 அன்று வெளியிடப்பட்டது. முதல் முழு நீள தெலுங்கு மொழி திரைப்படமான பக்த பிரஹ்லதா என்ற திரைப்படம் 6 பிப்ரவரி 1932 அன்று வெளியிடப்பட்டது.[3] பாதாள பைரவி (1951), மல்லிஸ்வரி (1951), தேவதாஸ் (1953), மாயா பஜார் (1957), நார்த்தனாசலா (1963), மரோசரித்ரா (1978), மாபூமி (1979), சங்கராபரணம் (1980), சலங்கை ஒலி (1983), சிவா (1989) போன்ற தெலுங்கு மொழித் திரைப்படங்கள் சிறந்த 100 இந்திய திரைப்படங்களில் சிஎன்என்-ஐபிஎன் இல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது 1948இல் சென்னையில் நிறுவப்பட்டது. பின்னாளில் ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்ட இந்தி, தமிழ், மலையாள மொழித் திரைப்படங்கள், தெலுங்குத் திரைப்படங்களை விடவும் அதிக வெற்றி பெறுவதால், ஆந்திர மாநில அரசு பிற மொழிப் படங்களுக்கு வரியை அதிகப்படுத்தியுள்ளது.[4] இயக்குநர் இராஜமௌலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 போன்ற திரைப்படங்கள் தெலுங்கு திரைப்படத்துறையில் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.[5] இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia