அத்லெடிகோ மாட்ரிட்
தற்போது 54,960 பார்வையாளர்கள் கொள்ளளவு கொண்ட விசென்டே கால்தெரான் மைதானத்தில் (Vicente Calderón)[4] தன்னிடப் போட்டிகளை ஆடி வரும் இவர்கள், 2015-ஆம் ஆண்டில் 70,000 பார்வையாளர்கள் கொள்ளளவு உடைய லா பெய்னேட்டா மைதானத்துக்கு (Estadio La Peineta) இடம்பெயர இருக்கின்றனர். எசுப்பானியாவில் அதிக ஆதரவாளர்கள் கொண்ட கால்பந்துக் கழகங்களில் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா-வுக்கு அடுத்து அத்லெடிகோ மூன்றாமிடம் பெறுகின்றனர். மேலும் உலகிலேயே பெரும் விளையாட்டுக் கழகங்களில் ஒன்றாகவும் உள்ளது; 65,000 பேர் பருவ நுழைவுச்சீட்டு கொண்ட ஆதரவாளர்கள் உள்ளனர். இவர்கள் இருக்கும் அதே நகரத்தில் இருக்கும் காரணத்தினால் இவர்களுக்கும் ரியல் மாட்ரிட் அணிக்கும் இடையே பெருத்த போட்டி காலாகாலமாக இருந்து வந்திருக்கிறது.[5] மேலும் பார்க்ககுறிப்புதவிகள்
|
Portal di Ensiklopedia Dunia