அந்தமான் மல்லிஅந்தமான் மல்லி (தாவர வகைப்பாட்டியல்: Jasminum andamanicum) என்ற தாவரயினம், அந்தமான் தீவுகளின் அகணியத் தாவரயினமாக திகழ்கிறது. இத்தாவரயினம் அருகியத் தாவரமாக உள்ளதென கண்டறிந்துள்ளனர்.[1] இந்த காட்டுயினம் அணிகலனாக அழகு சார்ந்தவைகளுக்குப் பயனாகிறதென, 1981 ஆம் ஆண்டு அந்தமான் தீவுகளில் கண்டறிந்துள்ளனர்.[2] இவ்வினம்,1991 ஆம் ஆண்டில்தான், இத்தீவுகளில் இருப்பதாக பதிவுகள் செய்யப்பட்டன.[3] 'சோல் பே' (Shoal Bay) என்னுமிடத்தில் மேத்யூ, அபிரகாம் ஆகியோர் கண்டறியும் வரை, இத்தாவரயினம் குறித்து தெரியாது.[4] அதிக வெளிச்சமுள்ள இடங்களில், இது பசுந்தாவரயினமாக பசுமை மாறா காடுகளில் வளரும் இயல்புயையதாக திகழ்கிறது. வேறு பெயர்கள்இச்சிற்றினத்தின் பெயரானது, வேறு/ஒத்த/இணைப் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக, அதன் அமைப்பு, தோற்றம் கொண்டு இவைகளை இருவகைப் படுத்துகின்றனர். அவை 1) ஒருவகைய(Monotypic) ஒத்த பெயர்கள்,[5] 2) வேறுவகைய(Heterotypic) ஒத்த பெயர்கள்[6] என அழைக்கப்படுகின்றன. ஆனால், கீழ்காணும் வேறுவகைய ஒத்த பெயர்கள் மட்டும் உள்ளன.
பேரினச்சொல்லின் தோற்றம்அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும்.[9] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.[10] இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia