உலகத் தாவரங்கள் இணைநிலை (POWO = Plants of the World Online) என்பது தாவர இனங்களின் இணைநிலை தரவுதளம் ஆகும்.[1]இணையத்தில் இந்த இணையதள தரவுப்பக்கங்களை, அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ பேணுகிறது. 2017 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இத்தளத்தினை உலகினருக்கு அறிமுகப்படுத்தியது. இதன் முக்கிய தொடக்க இலக்கு யாதெனில், “க்க2020 ஆம் ஆண்டுக்குள் உலக வித்துத் தாவரங்கள் குறித்த செய்திகளை ஒருங்கிணைத்து, தனது பயனர்களுக்கு தருதல்” ஆகும். எனவே, முதல் இலக்காக, வெப்ப வலயத்திலுள்ள ஆப்பிரிக்க தாவர வளங்களை ஒருங்கிணைத்தது. குறிப்பாக சாம்பேசியகா (Zambesiaca) தாவரவளம், கிழக்கு; மேற்கு ஆப்பிரிக்கத் தாவர வளங்கள் ஒருங்கிணைத்தல் ஆகும்.
↑Holz, Hanna; Segar, Josiane; Valdez, Jose; Staude, Ingmar R. (2022). "Assessing extinction risk across the geographic ranges of plant species in Europe". Plant, People, Planet4 (3): 303–311. doi:10.1002/ppp3.10251.