அனன்யா காசரவள்ளி
அனன்யா காசரவல்லி (Ananya Kasaravalli) ஓர் இந்திய நடிகையும் மற்றும் கன்னடத் திரையுலகில் இயக்குநரும், நாடகக் கலைஞரும் ஆவார்.[3] இவர் கருநாடகத்தில் திரைப்படத் தயாரிப்பாளர்களின் குடும்பத்தில் பிறந்தார்.[4] இவர், சென்னை எல்வி பிரசாத் பிலிம் மற்றும் டிவி அகாடமியில் திரைப்படத் தயாரிப்பை மேற்கொள்வதற்கு முன்பு திரைப்படங்கள், தொலைக்காட்சி மற்றும் நாடகங்களில் வெற்றிகரமான நடிப்பு வாழ்க்கையைப் பெற்றார். நடிகையாக கட பெலடிங்களு (2007) மற்றும் நாய் நேரு (2006) ஆகியவை அனன்யாவின் குறிப்பிடத்தக்க படங்களில் அடங்கும். இவரது முதல் இயக்குனரான ஹரிகதா பிரசங்கா/க்ரோனிகல்ஸ் ஆஃப் ஹரி (2016) [5] 9வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படப் போட்டிப் பிரிவில் சிறந்த படமாக வென்றது. தொழில்அனன்யா ஒரு நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'கூடிநிண்டா ககனக்கே' என்ற தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சியில் இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார். பின்னர் நாயி நேரலு, கட பெலதிங்களு போன்ற பல படங்களிலும், குப்தகாமினி, மலேபில்லு போன்ற பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றியுள்ளார். அனன்யா திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் தனது பணிக்கு இடையில், கூடுதலாக, பல கன்னட நாடகத் தயாரிப்புகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். அனன்யா தனது நடிப்பு வாழ்க்கையிலிருந்து சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டு திரைப்படத் தயாரிப்பைத் தொடர்ந்தார். 2014இல், இவர் சென்னை, எல்வி பிரசாத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அகாதமியில்[6] திரைப்படத் தயாரிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். அனன்யா தனது சொந்த தயாரிப்புகளை இயக்குவதற்கு முன்பு உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தனது தந்தை கிரிஷ் காசரவள்ளியின் நாயி நேரு மற்றும் ஹசீனா ஆகிய படங்களுக்கு உதவத் தொடங்கினார். பிரகாஷ் ராஜ் இயக்கிய ஒக்கரானே ( தமிழில் உன் சமையலறையில் என்ற பெயரில் வெளியானது ) மற்றும் பி. ஷேஷாத்ரி இயக்கிய விதாயா ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். நாயி நேரு மற்றும் கூர்மாவதாரம் ஆகிய படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்தார். அனன்யா இளம் இயக்குநராக வசியத் நாமா, பியாண்ட் பைனரி (மாற்றம் பற்றிய ஆவணப்படம்) மற்றும் கப்பு கல்லினா சைத்தனா போன்ற குறும்படங்களின் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இவை அனைத்தும் திரைப்பட விழாக்களில் மிகவும் பாராட்டப்பட்டன. மேலும் குறும்பட பிரிவில் பல விருதுகளை வென்றுள்ளன. 2016ஆம் ஆண்டில், இவர் ஹரிகதா பிரசங்கா / கிரோனிகல்ஸ் ஆஃப் ஹரி [7] என்ற தனது முதல் திரைப்படத்தை இயக்கினார். இது எழுத்தாளர் கோபாலகிருஷ்ண பையின் பெலாடி ஹரிச்சந்திரா என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது.[8] ஹரிகதா பிரசங்கா யாழ்ப்பாணம் சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் 9வது பெங்களுரு சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியத் திரைப்படப் போட்டியில் சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் வென்றது. இது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நூற்றாண்டு விருதுக்கு (ஒரு இயக்குனரின் சிறந்த அறிமுகம்) போட்டியிட்டது.[9] பூசன் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கன்னடத் திரைப்படமும் இதுவாகும்.[10] இத்திரைப்படம் நியூயார்க், நகர் படிம அருங்காட்சியகம், தெற்காசிய சர்வதேச விழா, சிங்கப்பூர் மற்றும் ஜியோ சர்வதேசத் திரைப்பட விழா [11] ஆகியவற்றிலும் திரையிடப்பட்டது. அனன்யா தான் படித்த எல்வி பிரசாத் திரைப்படம் & தொலைக்காட்சி பயிற்சி அகாதமியில் இணை பேராசிரியராகவும் உள்ளார். அங்கு இயக்கம் குறித்த பாடத்தை கற்பிக்கிறார்.[12] தனிப்பட்ட வாழ்க்கைஅனன்யா கிரிஷ் காசரவள்ளி மற்றும் வைசாலி காசரவள்ளி ஆகியோரின் மகளும், அபூர்வா காசரவள்ளியின் சகோதரியும் ஆவார். இவர் எம்.எஸ்.சந்தோஷ் என்பவரை மணந்தார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia