இதன் பூக்கள் மிகவும் மென்மையான இதழ்களை உடையன. முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ.[2] இதன் பூக்கள் மென் செம்மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் காணப்படும். இது சூரியன் உதித்ததும் அதன் பூக்கள் மலரத் தொடங்கும்.[3]
மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்றாகக் குறிஞ்சிப்பாட்டு நூல் குறிப்பிடுகிறது.[4] நீலம், அல்லி, அனிச்சம், முல்லை, நறவு ஆகிய மலர்களைத் தலையில் அணியும் கண்ணியாகவும், கழுத்தில் அணியும் மாலையாகவும் தொடுத்து அணிந்துகொண்டனர் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது [5]
மூச்சுக்காற்றுப் பட்டாலே குழையும் அளவுக்கு அனிச்சம் மென்மையான மலர் என்று திருக்குறள் குறிப்பிடுகிறது.
மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து [6]
இதன் மென்மைத் தன்மை இரண்டு திருக்குறள்களிலும் சுட்டப்படுகிறது.
நன் நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென் நீரள் யாம் வீழ்பவள் [7]
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப்பழம் [8]
அனிச்சம் பூ மிகவும் இலேசானது என்று ஒரு திருக்குறள் குறிப்பிடுகிறது.
அனிச்சப்பூ கால் களையாப் பெய்தாள் நுசும்பிற்கு
நல்ல படா பறை [9]