அனிஷ் குருவில்லா
அனிஷ் யோகன் குருவில்லா (Anish Kuruvilla) ஓர் இந்திய திரைப்பட நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்பட துறையில் பணிபுரிகிறார் .[1][2] இயக்குனராவதற்கு முன், இவர் சேகர் கம்முலாவுடன் நிர்வாக தயாரிப்பாளராக இருந்தார். டாலர் ட்ரீம்ஸ் (2000) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஆனந்த் (2004) படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.[3] 12 வருடங்கள் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்த பிறகு, 2016ஆம் ஆண்டு வெளியான பெல்லி சூப்புலு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்திய துடுப்பாட்ட வீரர் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்திலும் இவர் தோன்றினார்.[4] ஆரம்ப கால வாழ்க்கைகுருவில்லா ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்து ஐதராபாத்தில் வளர்ந்தார். இவர் இராமந்தபூரில் உள்ள ஐதராபாத்து பொதுப் பள்ளியில் பயின்றார்.[5] தொழில்சேகர் கம்முலாவின் முதல் படமான டாலர் ட்ரீம்ஸ் என்ற படத்தில் வேடத்தில் அறிமுகமானார். மேலும் ஆனந்த் திரைப்படத்திலும் துணை வேடத்தில் நடித்தார்.[6] இவர் 2016ஆம் ஆண்டு பெல்லி சூப்புலு திரைப்படத்தில் தோன்றினார்.[7] இவர் இயக்குநராக அறிமுகமாகும் முன் நாகேஷ் குக்குனூர், மணிசங்கருடன் உதவி இயக்குநராக பணி புரிந்தார்.[5] சேகர் கம்முலா தயாரித்த ஆவக்காய் பிரியாணி படத்திலும், முன்னணி நடிகராக இருக்கும் சர்வானந்த் தயாரித்த கோ அண்டே கோட்டி என்ற படத்திலும் பணியாற்றினார். சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia