அனைத்திந்திய இமாம்களின் அமைப்பு
அனைத்திந்திய மசூதிகளின் இமாம்கள் அமைப்பு (All India Organization of Imams of Mosques) புது தில்லியில் 1976-ஆம் ஆண்டில் ஹஸ்ரத் மௌலானா ஜமீல் அஹ்மத் இல்யாசி என்பவரால் நிறுவப்பட்டது. இந்தியாவில் உள்ள 5 இலட்சத்திற்கு மேற்பட்ட பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தும் இமாம்கள் மற்றும் துணை இமாம்களின் வருவாய் மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகளை அனைத்து மட்டங்களிலும் பார்வையிட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட இமாம்கள் மற்றும் துணை இமாம்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் அனைத்திந்திய தலைமைப் புரவலராக இமாம் உமர் அகமது இல்யாசி செயல்படுகிறார்.[1] ![]() இந்து-இசுலாமிய சமய நல்லிணக்கத்திற்கான ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் தலைவர் மோகன் பாகவத் 22 செப்டம்பர் 2022 அன்று இமாம்கள் அமைப்பின் தேசியத் தலைவரான உமர் அகமது இலியாசியை புது தில்லியில் சந்தித்துப் பேசினார்.[2][3][4] சாதனைகள்இந்த அமைப்பின் சாதனைகள் பின்வருமாறு:
அமைப்பின் முக்கிய கவலைகள்இந்தியாவில் மதம் மற்றும் இனங்களிடையே ஏற்பட்டும் பிளவுகள், அதனால் ஏற்படும் மோதல்கள், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் குறித்து இந்த அமைப்பு கவலையுடன் நோக்குவதுடன், சமய நல்லிணக்கதிற்கும் பாடுபடுகிறது. அமைப்பின் முன்னுரிமைகள்
மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia