அபிநய்
அபிநய் (அபினய் கிங்கர்) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் கஸ்தூரி ராஜா இயக்கிய 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். ஓரியோ பிஸ்கட் விளம்பரத்திலும் இவர் தோன்றினார். தொழில்கஸ்தூரி ராஜாவின் துள்ளுவதோ இளமை (2002) படத்தில் தனுஷ் மற்றும் ஷெரின் ஆகியோருடன் அபினய் அறிமுகமானார்.[1] இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து படங்களில் தோற்றத் தொடங்கினார். குறிப்பாக ஜங்ஷன் (2002), சிங்காரச் சென்னை (2004), பொன் மேகலை (2005) ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.[2][3][4] 2000 களின் பிற்பகுதியில், இவர் துணை வேடங்களில் நடிக்கத் துவங்கினார். குறிப்பாக சொல்ல சொல்ல இனிக்கும் (2009), பாலைவனச் சோலை (2009) உள்ளிட்ட படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்தார்.[5][6][7] இவர் துப்பக்கி (2012) படத்தில் வித்யூத் ஜம்வால்வுக்கு பின்னணி குரல் வழங்கி பின்னணி குரல் கலைஞராகவும் படங்களில் பணியாற்றியுள்ளார்.[8] திரைப்படவியல்படங்கள்
பின்னணிக் குரல் கலைஞராகவிளம்பரங்கள்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia