அபி டெய்லர்
அபி டெய்லர் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சூலை 19, 2021 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் மற்றும் குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடர் பஷீர் என்பவர் இயக்கத்தில், ரேஷ்மா[2] மற்றும் மதன் பாண்டியன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
அபிராமி குடும்பத்தினர்
அசோக் குடும்பத்தினர்
துணை கதாபாத்திரங்கள்
நடிகர்களின் தேர்வுஇது ஒரு பணி சார்ந்த ஒரு காதல் மற்றும் குடும்பத் தொடர் ஆகும். இந்த தொடரில் கதாநாயகனாக 'மதன் பாண்டியன்' என்பவர் அசோக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் முதல் முதலில் கதாநாயகனாக நடிக்கும் தொடர் இதுவாகும். இவருக்கு ஜோடியாக 'ரேஷ்மா முரளிதரன்' என்பவர் அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இருவரும் இணைத்து பூவே பூச்சூடவா (2017-2021) என்ற தொடரில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சோனா ஹைடன் என்பவர் இந்த தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிறார். இவர் இந்த தொடரில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர்களுடன் ரேஷ்மா பசுபுலேட்டி, வடவா கோபி, தாரா, சீனிவாசன், தரணி ரெட்டி போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[5] சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia