ரேஷ்மா பசுபுலேட்டி (Reshma Pasupuleti) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையும், வடிவழகியும், தொகுப்பாளரும் ஆவார். இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினரும் ஆவார்.[3][4][5] இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார்.[6][7] இவர் மலையாளம்-தமிழ் இருமொழித் திரைப்படமான கேர்ள்ஸில் பணிபுரிந்தார்.[8][9] இவர் நெட்ஃபிக்ஸ் இந்தியாவின் 2019 புதிய திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளார்.[10] இவர் இந்தியாவில் மி டூ இயக்கத்தின் ஆதரவாளராகவும் இருந்துள்ளார்.[11][12] பொழுதுபோக்குத் துறையில் நுழைவதற்கு முன்பு, இவர் ஒரு விமான பணிப்பெண்ணாகப் பணிபுரிந்துள்ளார். இவர் தற்போது பிக் பாஸ் தமிழ் 3 இல் அசல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டுள்ளார்.
தொலைக்காட்சி
திரைப்பட வரலாறு
ஆண்டு
|
திரைப்படம்
|
பங்கு
|
குறிப்புகள்
|
2015
|
மசாலா படம்
|
அங்கித்தா
|
அறிமுகம்
|
இனிமையன நாட்கள்
|
|
|
2016
|
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்
|
புஷ்பா
|
|
கேர்லள்ஸ்
|
கிளாரா
|
மலையாளம்-தமிழ் இருமொழி படம்
|
திரைக்கு வராத கதை
|
கோ 2
|
தீபா
|
|
மணல் கயிறு 2
|
சந்திரா
|
|
மேற்கோள்கள்