அப்பாஸ் கியரோஸ்தமி![]() அப்பாஸ் கியரோஸ்தமி ( Abbas Kiarostami (பாரசீக மொழி: عباس کیارستمی சிறு வயதிலிருந்து ஓவியக் கலையில் ஈடுபாடு கொண்டிருந்த அப்பாஸ் கியரோஸ்தமி, ஓவியம், வடிவமைப்பு ஆகியவற்றையே படித்தார். படித்து முடித்த பிறகு விளம்பரத் துறைக்குள் நுழைந்தார். ஈரானியத் திரைப்படங்களில் புதிய அலை இயக்கத்தின் வித்தாக டாரீயூஷ் மெஹ்ர்ஜூயின் ‘த கவ்’ (பசு) திரைப்படம் அடைந்த வெற்றி அப்பாஸ் கியரோஸ்தமிக்குப் திரைத்துறைமீது ஆர்வத்தைத் தூண்டவே திரைத்துறையில் நுழைந்தார். துவக்கத்தில் குழந்தைகளைப் பற்றி நிறைய ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் இயக்கினார். அவரது முதல் முழு நீளத் திரைப்படம் வேர் இஸ் த ஃப்ரண்ட்ஸ் ஹோம்?. அப்பாஸ் கியரோஸ்தமி உலக அளவில் கண்டு கொள்ளப்பட்டது இந்தப் படத்துக்குப் பிறகுதான். அவரது படங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அவர் கதை சொல்வதற்கு முயலவே மாட்டார் என்பதும், ஒரு கதாபாத்திரத்தை, ஒரு வாழ்க்கையை கேமரா பின் தொடர்ந்தால் எப்படி இருக்குமோ அதுபோல இருக்கும்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia