அமர சிற்பி ஜெகனாச்சாரி![]() அமர சிற்பி ஜெகனாச்சாரி ( Amarashilpi Jakanachari ) என்பவர் ஒரு புகழ்பெற்ற இந்திய தொன்மவியல் சிற்பியாவார். மேலைச் சாளுக்கியர்களுக்காகவும் போசளர்களுக்காகவும் பேளூர், ஹளேபீடு போன்ற இடங்களில் பல சிறந்த கோயில்களைக் கட்டியவர் என அறியப்படுகிறார். வாழ்க்கைஜெகனாச்சாரி கர்நாடகாவின் தும்கூரிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள கைதாலா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். சில ஆதாரங்களின்படி, இந்த நகரத்தின் அசல் பெயர் கிருதாபூர் என்பதாகும். இவர் தனது வாழ்க்கையை கலைக்காக அர்ப்பணித்திருந்தார். பல கோயில்களைக் கட்டியெழுப்ப தொலைதூரப் பயணம் மேற்கொண்டார். பணியில் மனைவியைக் கூட மறந்துவிட்டதாகத் தெரிகிறது. ![]() ஜெகனாச்சாரியும் அவரது மகனும்ஜெகனாச்சாரி வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், தனது தந்தையைத் தேடி இவரது மகன் தங்கனாச்சாரி கோயில் கோயிலாகச் சென்றார். கடைசியாக பேளுரில் ஜெகனாச்சாரியாவை கண்ட அவர் தனது தந்தை என்று அறியாமல் அவர் செதுக்கிய ஒரு ஒரு சிற்பத்திலுள்ள ஒரு குறைப்பட்டைக் கவனித்தார். சிற்பி செதுக்கிய கல்லில் ஒரு தேரை இருப்பதாக ஜெகனாச்சாரியிடம் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகனாச்சாரி, சிற்பம் குறித்த அவனது மதிப்பீட்டில் உண்மை இருந்தால் தனது வலது கையை துண்டித்துக் கொள்வதாக அறைகூவல் விடுத்தார். குறைபாடு இருந்த இடத்தை தங்கனாச்சாரி கண்டுபிடித்து இவரிடம் கூற அந்த இடத்தில் ஜெகனாச்சாரி உளியால் செதுக்க பார்த்தபோது அதில் இருந்து ஒரு தேரை வெளியேறியது. இதன் வழியாக சிற்பத்தில், குறைபாடு உண்மை என்றானது. இதனால், ஜெகனாச்சாரி தனது அறைகூவலின்படி தனது வலது கையை வெட்டிக் கொண்டதாக இரு தொன்மக் கதை நிலவுகிறது. [1] இறுதியில், இரண்டு சிற்பிகளும் தந்தை மற்றும் மகன் என்ற தங்கள் உறவை அறிந்து கொண்டதாகவும் அறியபடுகிறது. சென்னகேசவர் கோயில்இதனையடுத்து, ஜெகன்னாச்சாரி தனது சொந்த ஊரான கிருதாபுரத்தில் சென்னகேசவர் கோவிலைக் கட்டும் பணியை மேற்கொண்டார். கோவிலின் பணிகள் முடிந்தபின், கடவுள் இவரது வலது கையை மீண்டும் கொடுத்தார் என்று தொன்மக்கதை உள்ளது. இந்த நிகழ்வின் நினைவாக, கிருதபுரம் ஊரானது "கைதாலா" என்ற பெயரைப் பெற்றது.[1] கைதாலாவில் உள்ள சென்னகேசவர் கோயிலைப் பாதுகாக்க கர்நாடக மாநிலத்தில் உள்ள உள்ளூர் அரசு சாரா நிறுவனங்கள் நிதி திரட்ட முயற்சித்து வருகின்றன. ஜெகன்னாச்சாரி விருதுகள்இந்த புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரின் பணிகளை கொண்டாடுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தைச் சேர்ந்த திறமையான சிற்பிகள், கைவினைஞர்களுக்கு ஜெகன்னாச்சாரி விருதை கர்நாடக அரசு வழங்கிவருகிறது. பிரபல கலாச்சாரத்தில்1964 ஆம் ஆண்டில், இவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படம், கல்யாண் குமார் நடித்து "அமரசில்பி ஜெகனாச்சாரி" என்ற பெயரில் ஒரு கன்னடத் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. மூத்த ஒளிப்பதிவாளர் பி. எஸ். இரங்கா இந்த படத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார். இது கன்னடத்தின் முதல் வண்ணத் திரைப்படமாகும்.[2] 1964 ஆம் ஆண்டில், அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் சரோஜா தேவி நடிக்க "அமர சில்பி ஜக்கண்ணா" என்ற பெயரில் தெலுங்கில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia