அமேசான் பிரைம் வீடியோ
கூறுகள்தரம்திறன்பேசியைப் பொருத்து அமேசான் பிரைம் வீடியோவில் 4கே தரம் வரை காணொலிகளைக் காண முடியும். டால்பி டிஜிட்டல் 5.1 திரையரங்கு சூழொலியையும் அமேசான் ஆதரிக்கிறது.[2] எனினும், அமேசானில் உள்ள அனைத்து காணொலிகளையும் மேற்சொன்ன தரங்களில் காணல் கேட்டல், காணொலி வெளியான ஆண்டு, திறன்பேசியின் திறம், பயன்படுத்தப்படும் இயங்குதளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொருத்தே அமையும். சான்றாக, கொரோனா தொற்று காலக்கட்டத்தில், உலகளாவிய தரவு பயன்பாடு மிகும் என்பதைக் கருத்தில் கொண்டு, அமேசான் காணொலிகள் தரவு பரிமாற்ற நெரிசலைத் தவிர்க்க வேண்டி தரம் குறைக்கப்பட்டன.[3][4] தளம்சீனா, கியூபா, ஈரான், வட கொரியா, சிரியா தவிர உலகம் முழுவதும் அமேசான் பிரைம் வீடியோவை காணமுடியும். ஊடக ஓடையின் மூலம் வலைத்தளங்கள் வழியாகவும் கைபேசி செயலி வழியாகவும் கணினி மென்பொருள் வழியாகவும் அமேசான் பிரைம் வீடியோவைக் காண முடிகிறது.[5] ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் தொலைக்காட்சிகளில் கூட குரோம்காஸ்ட் உதவியுடன் பிரைம் வீடியோவைக் காண முடியும்.[6][7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia