அம்பாகர் சௌக்கி

அம்பாகர் சௌக்கி, (Ambagarh Chowki), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் மொகலா-மன்பூர்-அம்பாகர்சௌக்கி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான மொகலாவிற்கு வடக்கே 23.7 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு தென்மேற்கே 123 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 15 வார்டுகளும், 2,176 குடியிருப்புகளும் கொண்ட அம்பாகர் சௌக்கி நகரத்தின் மக்கள் தொகை 9,889 ஆகும். அதில் 4,851 ஆண்கள் மற்றும் 5,038 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.71 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1039 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.20 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 21.16 % மற்றும் 8.71 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 87.11%, இசுலாமியர் 7.30%, சமணர்கள் 0.69%, பௌத்தர்கள் 3.44%, கிறித்தவர்கள் 0.63%, சீக்கியர்கள் 0.71% மற்றும் பிற சமயத்தினர் 0.13% வீதம் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya