அம்பீர்ராவ் மோகித்தேஹம்பிராவ் மோகித் (Hambirrao Mohite) என்பவர் மராத்தியப் பேரரசர் சிவாஜியின் இராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தார். ஒரு திறமையான இராணுவத் தளபதியாக இருந்த இவர் சிவாஜிக்காக பல வெற்றிகரமானப் மேற்கொண்டார். பின்னர் சிவாஜியின் மகனான சம்பாஜியின் கீழ் பணியாற்றினார். இவர் கோலாப்பூர் ஆட்சியாளராகவும் இருந்தார். ஆரம்ப கால வாழ்க்கைஇவர் 1630 ஆம் ஆண்டில் தால்பித் நகரில் பிறந்தார். [1] ] சம்பாஜி மொகைத்திக்கு மகனாக பிறந்த இவருக்கு ஹரிபிராவ், சங்கர்ஜி என்ற இரு சகோதரர்களும் சாய்ராபாய், அன்னுபாய் என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர்தனது தந்தையிடமிருந்து எல்லா குணங்களையும் பெற்றார். [ நம்பமுடியாத ஆதாரமா? கொப்பால் போர்அந்த நேரத்தில், கருநாடகாவின் கொப்பால் மாகாணம் ஆதில்ஷாவின் படைத்தளபதி அப்துல் ரகீம்கான் மியானாவை அடக்குவதற்காக சிவாஜி இவரது தலைமையில் ஒரு படையை அனுப்பினார். சனவரி 1677 இல் எல்பர்காவில், இரு படைகளும் மோதின. இந்த போரில் ஆதில்ஷாவின் இராணுவத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஹம்பி ராவிற்கும் வெங்கோஜிக்கும் இடையிலான போர்இவரது சகோதரி சாய்ராபாய் என்பவரை சிவாஜியை மணந்தார். அன்னுபாய் வெங்கோஜியை (சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர்) மணந்தார். சிவாஜி கர்நாடகாவுக்கு வந்தபோது. வெங்கோஜி (ஏகோஜி) தந்தையின் சொத்தை பகிர்ந்து கொள்ள மறுத்தபோது, அவர்களுக்கிடையில் போர் தொடங்கியது. பின்னர் ஹம்பிராவ் வெங்கோஜியின் முக்கிய மாகாணங்களான ஜகதேவகாட், காவேரிப்பட்டணம், சிதம்பரம், விருத்தாச்சலம் ஆகியவற்றை வென்றார். சிவாஜி தனது மாநிலங்களை கைப்பற்றியதில் வெங்கோஜி மிகவும் வருத்தப்பட்டார். நவம்பர் 6, 1677 இல், வெங்கோஜி மற்றும் ஹம்பிராவ் ஆகியோருக்கிடையில் போர் தொடங்கியது. வெங்கோஜி போரில் வென்றார். ஆனால் பின்னர் ஹம்பிராவ் திடீரென வெங்கோஜியின் இராணுவத்தைத் தாக்கி தோற்கடிக்கப்பட்ட போரில் வெற்றி பெற்றார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிவாஜியின் தலையீடு சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1678 சூலை 22 அன்று ஆதிஷாகியின் படைத்தலைவன் அப்துல்லகானிடமிருந்து முக்கியமான வேலூர் கோட்டையை ஹம்பிராவ் வென்றார். சம்பாஜியின் முடிசூட்டு விழாவில் ஹம்பிராவின் பங்குசிவாஜி 1680 ஏப்ரல் 3 அன்று இறந்தார். ஏப்ரல் 21 அன்று மராட்டிய அமைச்சர்கள் ஹம்பிராவின் மருமகனான இராஜாராமுக்கு முடிசூட்டினர். அப்போது இராஜாராமுக்கு பத்து வயதுதான் ஆகியிருந்தது. சம்பாஜியை சிறையில் அடைக்க அமைச்சர்கள் உத்தரவிட்டனர். இது குறித்து ஹம்பிராவ் அறிந்ததும், அனைத்து அமைச்சர்களையும் சிறைபிடித்து சம்பாஜியிடம் ஒப்படைத்தார். ஸ்வராஜ்யாவுக்கு ஹம்பிராவ் அளித்த விசுவாசம் எவ்வளவு ஆழமானது என்பதை இது காட்டுகிறது. புர்ஹான்பூர் மீது தாக்குதல்புர்ஹான்பூர் தெற்கு மற்றும் வட இந்தியாவை இணைக்கும் ஒரு முக்கிய வர்த்தக மையமாக இருந்தது. புர்ஹான்பூரில் மொத்தம் 17 வர்த்தக மையங்கள் இருந்தன. முகலாயார்கள் வசமிருந்த புர்ஹான்பூரை சனவரி 30, 1681 அன்று, தளபதிகள் ஹம்பிராவ், சம்பாஜி ஆகியோர் திடீரெனத் தாக்கினர். அந்த நேரத்தில் புர்ஹான்பூரின் சுபேதாராக கான்ஹஹான் இருந்தார். புர்ஹான்பூரின் பாதுகாப்பிற்காக 200 பேர் மட்டுமே இருந்தனர், ஹம்பிராவிடம் 20,000 பேர் இருந்தனர். ஹம்பிராவின் இராணுவத்தை எதிர்க்கும் வலிமை கூட முகலாயர்களுக்கு இல்லை. மராட்டியர்கள் புர்ஹான்பூரின் அனைத்து வர்த்தக மையங்களையும் மூன்று நாட்கள் கொள்ளையடித்தனர். இந்த போரில் மராட்டியர்களுக்கு 1 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்கள் கிடைத்தன. மார்ச் 17, 1683 இல், ஹம்பிராவ் கல்யாண் பிவண்டியில் முகலாயப் பேரரசர் [[ஔரங்கசீப்அவுரங்கசீப்பின் மிக சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான ரணமஸ்து கானை தோற்கடித்தார். 1687 ஆம் ஆண்டில், வய் மாகாணத்திற்கு அருகே நடந்த ஒரு போரில் இவர் இறந்தார். குறிப்புகள்நூல் : - டாக்டர் சதாஷிவ் சிவ்தே எழுதிய சேனாபதி ஹம்பிரராவ் மோஹிட்பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-89959-40-1
|
Portal di Ensiklopedia Dunia