அம்மாச்சி பனபிள்ளை அம்மாஅம்மச்சி பனபிள்ளை அம்மா (Ammachi Panapillai Amma) என்பவர்கள் திருவிதாங்கூரை ஆட்சி செய்த மகாராஜாக்களின் மனைவிகளுக்கும் திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் பட்டங்களை கொண்டிருந்த ஆண் உறுப்பினர்களின் மனைவிகளுக்கும் அளிக்கப்பட்டத் தலைப்பாகும். [1] ![]() ![]() திருவிதாங்கூரில் முன்னர் இருந்த திருமண முறைப்படி, மகாராஜாவின் சகோதரியே மகாராணி என அழைக்கப்பட்டார். மன்னரது மனைவி மகாராணி என்று அழைக்கப்படுவதில்லை என்பதால் அம்மச்சி பனபிள்ளை அம்மா என்ற பட்டத்தை பெற்றார்கள்.[2] அம்மச்சிகள் பெரும்பாலும் நாயர் பிரபுக்களின் தம்பி சாதியைச் சேர்ந்தவர்கள். பட்டமும் பரிவட்டமும் என்று அழைக்கப்படும் திருமணத்தின் சம்பந்தம் வடிவத்தின் மூலம் மகாராஜாக்கள் இந்த பெண்களை மணந்தனர். தோற்றம்திருவிதாங்கூர் மகாராஜாக்கள் (தற்போதைய தெற்கு கேரளப் பகுதி) கி.பி 14 ஆம் நூற்றாண்டில் நிலத்தில் நிலவிய திருமண வழக்கத்தையும் பரம்பரையையும் ஏற்றுக்கொண்டனர். அதன்படி, ஒரு ராஜா இறந்தபோது, அவரது மருமகன் (சகோதரியின் மகன்) அடுத்த ஆட்சியாளராகிவிடுவார். அம்மாவீடுமகாராஜாக்கள் திருமணம் செய்துகொண்ட குடும்பங்கள் அம்மாவீடு என்று அழைக்கப்பட்டன. அப்போதைய கார்த்திகை திருநாள் தர்மராஜா பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு தலைநகரை மாற்றியபோது, வடசேரி, நாகர்கோயில், அருமனை, திருவட்டாறு ஆகிய இடங்களைச் சேர்ந்த தனது நான்கு மனைவிகளையும் அழைத்து வந்தார் என்று நம்பப்படுகிறது. அம்மாவீடு (அம்மச்சிகளின் மூதாதையர் இல்லங்கள்) என்று குறிப்பிடப்படும் புதிய வீடுகள் புதிய தலைநகரில் கட்டப்பட்டன. அவற்றுக்கு அருமனை அம்மாவீடு, வடசேரி அம்மாவீடு, நாகர்கோயில் அம்மாவீடு, திருவட்டாறு அம்மாவீடு என்று பெயரிடப்பட்டது. அரச குடும்ப ஆண் உறுப்பினர்கள் அனைவரும் மேலே குறிப்பிட்ட நான்கு அம்மாவீட்டின் ஒருவரிடமிருந்து மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விதியையும் மகாராஜா உருவாக்கினார். இது அம்மச்சிகளுக்கும் அவர்களது வீடுகளுக்கும் சமூக முக்கியத்துவத்தை அளித்தது. [1] திருவிதாங்கூர் மன்னர்கள் பாரம்பரியமாக அம்மாவீடுகள் மற்றும் அவரது உறவினரின் குடும்பத்திலிருந்தே தங்களது மனைவிகளை அழைத்துச் சென்றன. அவர்கள் அம்மச்சிகள் என அழைக்கப்பட்டனர். மேலும் பனபிள்ளை அம்மா என்ற கூடுதல் பட்டமும் கிடைக்கும். அம்மாவீட்டுக்கு வெளியில் இருந்து வரும் இன்னொரு பெண்மணி மகாராஜாவை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால், அவர் முதலில் அம்மாவீட்டில் ஒருவரால் தத்தெடுக்கப்பட்டு பின்னர் மன்னனுடன் திருமணம் செய்து வைக்கப்படுவார். மகாராஜா சுவாதி திருநாள், மகாராஜா ஆயில்யம் திருநாள், மகாராஜா மூலம் திருநாள் ஆகியோரின் திருமணம் இவ்வாறு நடந்தது. சமூக அந்தஸ்துஅம்மச்சிகளும் அவரது குழந்தைகளும் உயர்ந்த சமூக மரியாதைக்குரியவர்களாக இருந்தபோதிலும், அவர்களுக்கு எந்த அரச பட்டங்களும் இல்லை. எந்த அரசியல் சக்தியும் இல்லை. அவர்கள் வெளியாட்களாகவே இருந்தனர். மேலும் அவரது கணவரையும் அவரது குடும்பத்தினரையும் விட தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். மேலும் அவர்களுக்கும் மற்ற அரச உறுப்பினர்களுடன் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. அம்மச்சிகள் தங்கள் அரச வாழ்க்கைத் துணைகளுடன் பகிரங்கமாகக் காணப்படக்கூடாது; அவர்களால் ஒரே வண்டிகளில் பயணிக்க முடியவில்லை. அவர்கள் மகாராஜாவுடன் பயணம் செய்தால், அவர்கள் தங்கள் துணைவர்களுக்கு எதிரே அமர்ந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அருகில் ஒருபோதும் இருக்க மாட்டார்கள். மகாராஜாக்கள் தங்கள் மனைவிகளால் சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பத்கில்லை அல்லது அரச உறுப்பினர்களுடன் உணவு எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை. பின்வரும் காலங்களில், கட்டுப்பாடுகளும் குறைக்கப்பட்டன. ரெவ். சாமுவேல் மேட்டர் என்பவர் 19 ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூரின் அம்மச்சிகளின் நிலைப்பாடு குறித்து பின்வருவனவற்றைக் கவனித்தார்:
இந்த வரம்புகள் அனைத்தையும் மீறி, நிலம், பிற சொத்துக்களுக்கு வரி விலக்கு, வசதியான வாழ்க்கை ஏற்பாடுகள், பிற கௌரவங்கள் போன்ற சலுகைகளுடன் அம்மச்சிகளுக்கு ஈடுசெய்யப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia