அம்மோனியம் சல்பைட்டு

அம்மோனியம் சல்பைட்டு
Ball-and-stick model of two ammonium cations and one sulfite anion
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் சல்பைட்டு
வேறு பெயர்கள்
அம்மோனியம் சல்பைட்டு, ஈரம்மோனியம் சல்பைட்டு, ஈரம்மோனியம் சல்போனேட்டு, சல்பியூரசு அமிலம், ஈரம்மோனியம் உப்பு, சல்பியூரசு அமிலம் அம்மோனியம் உப்பு(1:2)
இனங்காட்டிகள்
10196-04-0 Y
ChemSpider 23404 Y
EC number 233-484-9
InChI
  • InChI=1S/2H3N.H2O3S/c;;1-4(2)3/h2*1H3;(H2,1,2,3) Y
    Key: PQUCIEFHOVEZAU-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 25041
  • [H][N+]([H])([H])[H].[H][N+]([H])([H])[H].O=S([O-])[O-]
  • [O-]S([O-])=O.[NH4+].[NH4+]
UNII 8LF589Y5GD Y
UN number 3077
பண்புகள்
(NH4)2SO3
வாய்ப்பாட்டு எடை 116.14 கி/மோல்
தோற்றம் நிறமற்றது[1] நீர் உறிஞ்சும் திறன் கொண்ட படிகங்கள்[2]
உருகுநிலை 65 °C (149 °F; 338 K) சிதைவடையும்[1]
35 கி/100 மி.லிட்டர்[1]

32.4 கி/100மி.லிட்டர் 0 பாகை செல்சியசில்[3] பாகை செல்சியசில்[3]

கரைதிறன் அசிட்டோன், ஆல்ககால் ஆகியவற்றில் கரையாது.[2]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.515.[3]
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H314
P260, P264, P280, P301+330+331, P302+352, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P332+313, P337+313, P362, P363
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது[2]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அம்மோனியம் ஐதராக்சைடு அமோனியம் தயோசல்பேட்டு அம்மோனியம் சல்பேட்டு அமோனியம் பைசல்பேட்டு அம்மோனியம் பெர்சல்பேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் சல்பைட்டு
பொட்டாசியம் சல்பைட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Y verify (இது Y☒N ?)

அம்மோனியம் சல்பைட்டு (Ammonium sulfite) என்பது (NH4)2SO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

நீர்த்த கரைசலில் உள்ள கந்தக டை ஆக்சைடுடன் அம்மோனியாவை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் அம்மோனியம் சல்பைட்டைத் தயாரிக்கலாம்:

2 NH3 + SO2 + H2O -> (NH4)2SO3

அம்மோனியம் சல்பைட்டு வாயு துப்புரவாக்கிகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது இந்நடைமுறை வழக்கற்றுப் போய்விட்டது. மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியேறும் கந்தக டை ஆக்சைடை அகற்ற அம்மோனியம் ஐதராக்சைடைக் கொண்டுள்ளது. இந்த மாற்றமே வால்தெர் செயல்முறையின் அடிப்படையாகும். இதன் விளைவாக வரும் அம்மோனியம் சல்பைட்டை காற்றில் ஆக்சிசனேற்றம் செய்து அம்மோனியம் சல்பேட்டைத் தயாரிக்கலாம்.[4]

பயன்கள்

தனிமநிலை கந்தகத்துடன் வினைபுரிந்து அம்மோனியம் தயோசல்பேட்டு தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக அம்மோனியம் சல்பைட்டு பயன்படுகிறது.

வாழ்விடத்தில்

அழகுசாதனப் பொருட்களுக்கும், அம்மோனியம் சல்பைட்டு ஒரு முடி நேராக்கும் முகவராகவும், கூந்தலில் அலை வடிவம் உருவாக்கும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது.[5] சோடியம் ஐதராக்சைடு முடிக்கு ஏற்படுத்தும் அழிவுகரமான தன்மை காரணமாக, சோடியம் ஐதராக்சைடு சார்ந்த தயாரிப்புகளுக்குப் பதிலாக அம்மோனியம் சார்ந்த முடி தயாரிப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அம்மோனியம் சல்பைட்டு கொண்ட மிகவும் பொதுவான உணவுப் பொருள் கேரமல் வண்ணம் ஐ150 ஆகும். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் படி , கேரமல் வண்ணத்தில் அம்மோனியம், பொட்டாசியம் அல்லது சோடியம் சல்பைட்டு உள்ளது.[6]

புகைப்படக் கலையில் படம் பொருத்துபவர்களுக்கு அம்மோனியம் சல்பைட்டு ஒரு பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. படப் படலங்கள் உருவாக்கப்படும்போது, ​​அம்மோனியம் சல்பைட்டு ஐப்போவை (சோடியம் தயோசல்பேட்டு அல்லது அம்மோனியம் தயோசல்பேட்டு) பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் குறைக்கும் முகவர்களில் ஒன்றாக இச்சேர்மம் பயனாகிறது.[7]

செங்கற்கள் தயாரிப்பிலும் அம்மோனியம் சல்பைட்டைப் பயன்படுத்தலாம். அம்மோனியம் சல்பைட்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் செங்கற்கள் முக்கியமாக ஊது உலை உட்பூச்சுக்கு பயன்படுத்தப்படுகின்றன.[8]

குளிர் உலோக வேலைகளுக்கான உயவு எண்ணெய்களில் அம்மோனியம் சல்பைட்டைச் சேர்க்கலாம். உயவு எண்ணெய்கள் உராய்வைக் குறைத்து, வெப்ப உற்பத்தியைக் குறைத்து, உலோகங்களிலிருந்து அசுத்தங்கள் வெளியேறாமல் தடுக்கும் நோக்கம் கொண்டவையாகும்.[8]

வேதிப் பண்புகள்

அம்மோனியம் சல்பைட்டு ஓர் ஒடுக்கும் முகவராகும்.[9] இது சிதைவதற்கு வெப்பப்படுத்தும்போது கந்தக டை ஆக்சைடு மற்றும் நைட்ரசனின் ஆக்சைடுகளை வெளியிடுகிறது.

அம்மோனியம் சல்பைட்டின் ஒப்படர்த்தி 1.41. ஆகும்.[2] அம்மோனியம் சல்பைட்டின் ஒளிவிலகல் குறியீடு எண் மதிப்பு 1.515 ஆகும்.[3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Chemical Entity Data Page".
  2. 2.0 2.1 2.2 2.3 "Material Safety Data Sheet: Ammonium sulfite MSDS. accessed Oct 19, 2011)". Archived from the original on October 3, 2018. Retrieved November 29, 2011.
  3. 3.0 3.1 3.2 3.3 Pubchem. "SID 167823 - PubChem".
  4. "Ammonium Compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2012). Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a02_243. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3527306732. 
  5. Europe. European Commission. Health and Consumers. Cosmetics - CosIng [Cosmetics Directive (v.1)]. European Commission. Web. 26 Oct. 2011.
  6. Haist, Grant Milford (1979). Modern photographic processing. New York: Wiley. ISBN 0-471-02228-4. கணினி நூலகம் 251467968.
  7. Haist, Grant Milford (1979). Modern photographic processing. New York: Wiley. ISBN 0-471-02228-4. கணினி நூலகம் 251467968.
  8. 8.0 8.1 O'Neil, Maryadele J. The Merck Index: an Encyclopedia of Chemicals, Drugs, and Biologicals. Whitehouse Station, NJ: Merck, 2001. 561. Print.
  9. "Ammoniumsulfit - 10196-04-0".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya