அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி
அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி, (Amreshwar Pratap Sahi) (பிறப்பு: 1 ஜனவரி 1959) ஒரு இந்திய நீதிபதி[1] மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாவார். 1985ஆம் ஆண்டில் சட்டப் பட்டம் பெற்ற இவர், செப்டம்பர் 6, 1985 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக சேர்ந்தார். இங்கு இவர் சொத்து மற்றும் அரசியலமைப்பு விடயங்களில் அனுபவமானார்.[2] பின்னர் செப்டம்பர் 24, 2004 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2] இதனைத் தொடர்ந்து ஆகத்து மாதம் 18, 2005-ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கபட்டார். அக்டோபர் 23 அன்று, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 10 நவம்பர் 2018 அன்று, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[3]17 நவம்பர் 2018 அன்று, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். பின்னர் 11 நவம்பர் 2019 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia