அயான் கேர்சி அலி
அயான் கேர்சி அலி (அயான் ஹிர்சி அலி, ஆங்கிலம்: Ayaan Hirsi Ali; சோமாலி மொழி: Ayaan Xirsi Cali; பி. 13 நவம்பர், 1969, மொகடிசு, சோமாலியா) ஒரு பெண்ணியவாதி, அரசியல்வாதி, எழுத்தாளர். இவர் இசுலாமிய தீவிரவாதத்துக்கு எதிராகக் குரல் எழுப்பும் முன்னாள் முஸ்லீம்களில் மிகவும் அறியப்பட்டவர்.[1][2][3] இவர் ஆபிரிக்காவில் இருந்து 1992 -ஆம் ஆண்டு புலம் பெயர்ந்தார். அங்கு அவர் இஸ்லாமை விமர்சனம் செய்தார். அங்கு அவர் டச்சு இயக்குநர் தியோ வான் கோவுடன் இணைந்து அடிபணிதல் ("Submission) என்ற படத்தை எடுத்தார். அப்படத்தால் ஆத்திரமுற்ற ஒரு முஸ்லீமால் அந்த இயக்குநர் கொல்லப்பட்டார். அதன் பின் அயான் கேர்சி அலி தனது உயிருக்கு பயந்து டச்சு பாதுகாப்பில் இருந்தார். பின்னர் அவர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். 2005 இல் டைம் இதழ் இவரை உலகின் 100 செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராக அறிவித்தது. 2002-ஆம் ஆண்டு இவர் தன்னை ஒரு இறைமறுப்பாளர் என்று அறிவித்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia