சோமாலியா
சோமாலியா (Somalia, சோமாலி மொழி: Soomaaliya, சோமாலிக் குடியரசு), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே எதியோப்பியா ஆகியன அமைந்துள்ளன. சோமாலியா ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக நீண்ட கடற்கரையை கொண்டது,[1][2][3] அதன் நிலப்பகுதி முக்கியமாக பீடபூமிகள், சமவெளி மற்றும் மலைப்பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன் பருவ காலநிலை, குறிப்பிட்ட கால பருவக் காற்று மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு ஆகியவற்றுடன் ஆண்டு முழுவதும் வெப்பச் சூழல்களால் ஆனது.[4] சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது. ![]() ![]() ![]() ![]()
இதனையும் காண்கசான்றுகள்
வெளி இணைப்புகள்சோமாலியா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
|
Portal di Ensiklopedia Dunia