அயிரை மலை (சங்க காலம்)அயிரைமலை என்னும் சங்ககாலப் பெயர்வழக்கு அய்யனார் மலையான ஐயப்பன் மலை என மருவியுள்ளது. நேரிமலை எனவும் இது வழங்கப்பட்டது. அயிரை என்பது மிக உயர்ந்த மலை. அதன் முகடுகளிலிருந்து அருவிகள் இழும் என்னும் ஓசை முழக்கத்துடன் கொட்டும். [1] இது சிலம்பாறு. பாலைக் கௌதமனார் என்னும் புலவர் சேர மன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் அயிரை மலை நாட்டைப் போரிட்டு வென்றதைக் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவர் குறிப்பிடும் நேருயர் நெடுவரை என்னும் தொடர் நேரிமலை என்பதும் அயிரை மலையே என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. [2] மூன்றாம் பத்தில் உள்ள இந்தப் பாடலின் பதிகம் இவன் அயிரைமலைத் வழிபட்டான் எனக் கூறுகிறது. [3] யானை-நிரை பூட்டி இரண்டு கடல்களிலிருந்தும் நீரை ஒரே பகலில் கொண்டுவரச் செய்து நீராடிய பின் அயிரைமலை தெய்வத்தை வழிபட்டான். [4]இளஞ்சேரல் இரும்பொறையின் முன்னோனாகிய பல்யானைச் செல்கெழு குட்டுவன் புலவுச் சோறு தந்து அயிரை தெய்வத்தை வழிபட்டான். [5] அப்போது அவனது அரசியல் சுற்றம் திங்களைச் சூழ்ந்திருக்கும் விண்மீன்கள் போலக் குழுமியிருந்தது.[6] இந்தச் செய்தி சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. [7] பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர் சேர மன்னன் இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடும்போது அவனது முன்னோரைப் போலவே இவனும் அயிரை மலையை வழிபட்டதைக் குறிப்பிடுகிறார். [8] அயிரை என்னும் சொல் மீனைக் குறிக்கும். [9] இது இக்காலத்தில் மகர சோதி என்பதாகக் காட்டப்படுகிறது. அடிக்குறிப்பு
மீன் - குறுந்தொகை 128, 178, ஐங்குறுநூறு 164, மீன் - புறநானூறு 67-6 |
Portal di Ensiklopedia Dunia