அய்யம்பாளையம் பெரியமுத்தாலம்மன் கோயில்அய்யம்பாளையம் பெரியமுத்தாலம்மன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யம்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1] திருக்கோவில் 1990 ஆம் ஆண்டும் 2005 ஆம் ஆண்டும் குடமுழுக்கு செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முதல் வாரத்தில் இங்கு திருவிழா நடப்பது வழக்கமாகும்.[2] வரலாறுபட்டக்காரர் என்பவர் சுமார் 400 - 500 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள பெரிய அய்யம்பாளையத்திற்கு முதலில் குடி வந்தார். இவர் பெரியமுத்தாலம்மன் கோயிலைக் கட்டி வணங்கி வந்தார். பின் பொது மக்கள் வணங்க, திருவிழா கொண்டாடப்பட்டது. நாட்டுப்புறவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஆர்வமூட்டும்படியான அதிக தகவல்கள் இத்திருக்கோயிலின் வழிபாட்டு முறைகளில் உள்ளன. முதலில் பீடமும், அதற்குப்பின் மூலத்தானமும், அர்த்த மண்டபமும் பட்டக்காரரின் முன்னோர்கள் கட்டியதாகும். அதில் அவர்களின் சிலையும், பெயரும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. அடுத்துள்ள கீதாாி மண்டபம் கீதாாியால் கட்டப்பட்டது. அடுத்துள்ள பொது மண்டபம் எட்டுப்பட்டரையினரால் கட்டப்பட்டது. வஞ்சி மூப்பர் என்பவரை இக்கோவிலின் முதல் அர்ச்சகராக பட்டக்காரர் நியமித்தார். கோவிலின் ஆரம்ப காலகட்டத்திலிருந்தே இக்கோவிலினுள் சாதி வேறுபாடில்லாமல் அனைவரும் சென்று வழிபடுகிறார்கள். காந்தி, நேரு போன்ற வரலாற்றுத் தலைவர்கள் கோவில் சுற்றுப்புற மண்டபச் சுவரில் சிலையாக வைக்கப்பட்டுள்ளனர். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia