அரசு மருத்துவக் கல்லூரி தூத்துக்குடி
தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி (Thoothukudi Medical College) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்திருக்கும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றாகும். தென்தமிழகத்தில் தூத்துக்குடி நகரில் உள்ள இக்கல்லூரி டி.கே.எம்.சி அல்லது அரசு மருத்துவக்கல்லூரி, தூத்துக்குடி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் இக்கல்லூரி இந்திய மருத்துவக் கழகம் மற்றும் உலகசுகாதார நிறுவனத்தின் அங்கீகாரங்களை பெற்றுள்ளது. வரலாறுதமிழக அரசு 16.08.2000ஆம் ஆண்டில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியினை நிறுவியது.[1] இக்கல்லூரியானது முதலில் கடற்கரை சாலையிலுள்ள மீன்பிடி கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய (மீன்வளக் கல்லூரி) வளாகத்திலிருந்து செயல்பட்டது. பின்னர் 2001ஆம் ஆண்டில் தூத்துக்குடி நகரத்திற்கு மாற்றப்பட்டது. சூலை 2001 முதல் மருத்துவப் பட்டப் படிப்புக்கு ஆண்டுக்கு 100 மாணவர்கள் சேர்க்கை என்ற எண்ணிக்கையுடன் கல்லூரி செயற்படத் தொடங்கியது. புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அடுத்தடுத்த ஆண்டுகளில் மருந்தியல், நோயியல், நுண்ணுயிரியல், சமூகம் மற்றும் பாதுகாப்பு மருத்துவம் போன்ற துறைகள் செயல்படத் தொடங்கின. மாவட்ட தலைமை மருத்துவமனை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக செயல்படத் தொடங்கியது. அமைவிடம்தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி தூத்துக்குடி நகரத்தில் இருந்து 3 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 25 ஏக்கர் அளவில் கல்லூரி வளாகம் பரந்து விரிந்துள்ளது.[2] மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கென தனித்தனியாக விடுதி வசதிகள் உள்ளன. மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை மற்றும் விடுதி போன்ற அனைத்தும் 1 கி. மீ. சுற்றளவிற்குள்ளேயே உள்ளன. தூத்துக்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 5.1 கி. மீ. தொலைவிலும், பேருந்து நிலையத்திலிருந்து 3.2 கி. மீ. தொலைவிலும் இக்கல்லூரி அமைந்துள்ளது. அரசு பல தொழில் நிறுவன வளாகம், நல்ல வசதியான விரிவுரை அறைகள், நூலகங்கள், வாசிப்பு அறைகள், அரங்குகள் போன்றவை இக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளன. வழங்கப்படும் படிப்புகள்இளநிலை மருத்துவப் படிப்புகள்
முதுகலை மருத்துவ படிப்புகள்
பட்டயச்சான்றிதழ்
தொழில் நுட்பப் படிப்புகள்
பிற படிப்புகள்
மாணவர் சேர்க்கைஇந்தக் கல்லூரியில் 2000-2012 கல்வி ஆண்டு வரை 100 மாணவர்கள் வீதம் சேர்க்கப்பட்டனர். தற்போது மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 150ஆக உள்ளது.[3] 15% இடங்கள் அகில இந்திய மருத்துவக் கழகப் பரிந்துரையிலும் 85 சதவீத இடங்கள் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. துறைகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia