அரோமாட்டியம்![]() கரிம வேதியியலில், அரோமாட்டியம் (aromaticity) என்பது ஒரு வேதியியல் பண்பு ஆகும். இது கரிமச் சேர்மங்களில் உள்ள நிறைவுறாத பிணைப்புகள், தனிப் பிணைப்புகள் அல்லது வெற்றுச் சுற்றுப்பாதைகள் ஆகியவற்றின் இணைந்த வளையமானது எப்படி எதிர்பார்க்கப்படுவதை விட வலிமையான நிலையான தன்மையை வெளிப்படுத்துகிறது என்பதை விவரிக்கின்றது. அத்தகைய சேர்மங்களின் அரோமாட்டிய பண்புகளுக்கும் நறுமணத் தன்மைக்கும் இடையே பொதுவான தொடர்பு இல்லை. 1855 இல் ஆகத்து வில்கெம் ஆப்மேன் எழுதிய கட்டுரையில் இந்தச் சொல்லின் தொடக்கப் பயன்பாடு இருந்தது.[1] அரோமாட்டியம் என்பது சுழற்சி நீக்கம் மற்றும் உடனிசைவு ஆகியவற்றின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது.[2] பொதுவாக இலத்திரன்கள் ஒற்றை மற்றும் இரட்டைப் பிணைப்புள்ள அணுக்களின் வட்ட அமைப்புகளை மாறி மாறிச் சுற்றுகின்றன. இந்தப் பிணைப்புகள் ஒற்றைப் பிணைப்பு மற்றும் இரட்டைப் பிணைப்பின் கலப்பினமாகக் காணப்படலாம். மேலும் சேர்மத்தில், ஒரு வளையத்தில் உள்ள ஒவ்வொரு பிணைப்பும் ஒன்றுக்கொன்று ஒத்ததாக இருக்கும்.[3][4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia