அலம்படி (அரசியல்வாதி)
அலம்பாடி (Alambadi Azmi)[3] என்பவா் இந்திய அரசியல்வாதியும் உத்திரப் பிரதேச மாநிலச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்திரப்பிரதேச மாநிலம் நிசாமாபாத் சட்டமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு 18ஆவது உத்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[4] இவா் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் 17ஆவது உத்திரப் பிரதேச சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.[4] தனிப்பட்ட வாழ்க்கைஅலம்பாடி, 1936ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி, வடிவஜ்மா ஆஸ்மிக்கு ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள விண்டவால் என்ற இடத்தில் மகனாகப் பிறந்தார். இடைநிலை வரை படித்து மின்னியல் & எந்திரவியல் பட்டயப்படிப்பினை முடித்துள்ளார். இவர் தொழிலில் பொறியாளர் ஆவார். அலப்படி குடாசியா கானை மணந்தார். இந்த இணையருக்கு ஆறு மகன்கள் உள்ளனர்.[1] அரசியல் வாழ்க்கை1996 முதல், அலம்பாடி நிஜாமாபாத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவர் உத்தரபிரதேசத்தின் 13, 14, 16, 17, 18ஆவது என ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் ஆவார்.[2] 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், அலம்பாடி பாரதிய ஜனதா கட்சியின் மனோஜை 34,187 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, நிஜாமாபாத் தொகுதியில் தனது பதவியினைத் தொடர்ந்தார்.[4][5] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia