உத்தரப் பிரதேச சட்டப் பேரவை
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, உத்தரப் பிரதேசத்தில் சட்டம் இயற்றும் இரு அமைப்புகளில் ஒன்று. இதை உத்தரப் பிரதேச விதான் சபா (இந்தி: उत्तर प्रदेश विधान सभा) என்று அழைக்கின்றனர். சட்டப் பேரவையை கீழ்சபை என அழைக்கின்றனர். (மற்றொரு அமைப்பை உத்தரப் பிரதேச சட்ட மேலவை என்று அழைக்கின்றனர்.) சட்டப்பேரவையில் மொத்தமாக 403 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுவர். 403 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒருவராக தேர்ந்தெடுக்கப்படுவார். மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்தல் நடத்தப் பெறும். முன்பு ஆங்கிலோ இந்தியர் ஒருவர் ஆளுநரால் நியமிக்கப்படுவார்.[2] சனவரி 2020 இல், 104வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம், 2019 மூலம் இந்தியாவின் நாடாளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இரத்து செய்யப்பட்டன. சட்டப் பேரவைத் தொகுதிகள்மொத்தம் 403 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்வர்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia