அலாவுதீன் கில்ஜியின் தேவகிரி முற்றுகை
![]() இன்றைய இந்தியாவில் புது தில்லி மற்றும் தேவகிரி அலாவுதீன் கில்சியின் தேவகிரி முற்றுகை ( Alauddin Khalji's conquest of Devagiri ) என்பது அலாவுதீன் கில்சியால் தேவகிரி மீது மேற்கொள்ளப்பட்ட ஓர் முக்கிய இராணுவ நடவடிக்கையாகும். பொ.ச.1308 வாக்கில்,[1][1][2] தில்லி சுல்தானக ஆட்சியாளர் அலாவுதீன் கில்சி தனது தளபதி மாலிக் கபூரின் தலைமையில் ஒரு பெரிய படையை யாதவ மன்னர் இராமச்சந்திரனின் தலைநகரான தேவகிரிக்கு அனுப்பினார். அலாவுதீன் முன்பு 1296-இல் தேவகிரி மீது படையெடுத்தார்.[3] மேலும் இராமச்சந்திரனை தனக்கு கப்பம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தினார். இருப்பினும், இராமச்சந்திரன் இதனை செலுத்த மறுத்தார். மேலும் 1304 இல் குசராத்தில் இருந்து அலாவுதீனால் இடம்பெயர்க்கப்பட்ட வகேலா மன்னன் கர்ணனுக்கு அடைக்கலம் கொடுத்தார்.[2] அல்ப் கான் தலைமையிலான தில்லி இராணுவத்தின் ஒரு பகுதி, யாதவ இராச்சியத்தில் கர்ணனின் சமஸ்தானத்தின் மீது படையெடுத்து, வகேலா இளவரசி தேவலாதேவியைக் சிறைபிடித்தது.[4] பின்னர் அவர் அலாவுதீனின் மகன் கிஸ்ர் கானுக்கு திருமணம் செய்து வைக்கபட்டார். மாலிக் கபூரின் தலைமையில் மற்றொரு பிரிவு, பலவீனமான எதிர்ப்பிற்குப் பிறகு தேவகிரியைக் கைப்பற்றியது. இராமச்சந்திரன் அலாவுதீனின் அடிமையாக மாற ஒப்புக்கொண்டார். பின்னர், தெற்கு இராச்சியங்களில் சுல்தானகத்தின் படையெடுப்புகளில் மாலிக் கபூருக்கு உதவினார். பின்விளைவுஇராமச்சந்திரனுக்கு பல்லாலன் மற்றும் பீமதேவன் என்ற இரு மகன்கள் இருந்தனர். [5] இவர்களில், பீமன் கொங்கணுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவர் மகிகாவதியில் ( மும்பையிலுள்ள நவீன மாகிம் ) ஒரு தளத்தை நிறுவினார். [6] சான்றுகள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia