அழகர்கோவில் ஊராட்சி

அழகர்கோவில் ஊராட்சி, தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏ. வலையபட்டி ஊராட்சியில் இருந்த அழகர் கோவில், கோணவராயன்பட்டி, ஆயத்தபட்டி ஆகிய மூன்று சிற்றூர்களைக் கொண்டு புதிதாக அழகர்கோவில் ஊராட்சி நிறுவப்பட்டது.[1]இதன் தலைமையிடம் அழகர் கோவிலில் உள்ளது.

அமைவிடம்

அழகர் மலை அடிவாரத்தில் அமைந்த அழகர்கோவில் ஊராட்சி மதுரைக்கு வடகிழக்கே 24.7 கிலோமீட்டர் தொலைவிலும்; மேலூருக்கு வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

புகழ் பெற்ற தலங்கள்

இவ்வூராட்சியில் புகழ்பெற்ற அழகர் கோவில், பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, பழமுதிர்சோலை முருகன் கோயில், நூபுர கங்கை தீர்த்தம் மற்றும் ராக்காயி அம்மன் கோயில் உள்ளது.

அரசியல்

அழகர்கோவில் ஊராட்சி மேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya