அழகிய தமிழ்மகன் (Azhagiya Tamil Magan) என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[4] இந்தத் திரைப்படம் பரதனின் இயக்கத்திலும் எசு. கே. சீவாவின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது[5] இத்திரைப்படத்தில் விசய் முதன்முறையாக இரட்டை வேடங்களின் நடிக்கிறார் .[6]
இத்திரைப்படம் நவம்பர் 8, 2007இல் வெளியிடப்பட்டது.[7] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் மகா முதுரு என்ற பெயரிலும் இந்தி மொழியில் சப்சே படா கில்லாடி என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது. இப்படம் 22 மார்ச் 2024 அன்று மீண்டும் வெளியிடப்பட்டு தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர்கள்
நடிகர் |
கதைமாந்தர்
|
விஜய் |
குரு/பிரசாத் (இரட்டை வேடம்)
|
சிரேயா சரன் |
அபிநயா
|
நமிதா |
தனலட்சுமி
|
சயாசி சிண்டே |
தீய நகை வணிகர்
|
ஆசிசு வித்யார்தி |
ஆனந்து செல்லையா
|
சந்தானம் |
குருவின் நண்பர்
|
கஞ்சா கறுப்பு |
குருவின் ஊர் நண்பர்
|
தணிக்கெல்லா பரணி |
குருவின் தந்தை
|
கீதா |
குருவின் தாய்
|
சிறீமன் |
விளையாட்டு வீரர்
|
எம். எசு. பாசுகர் |
குருவின் பயிற்றுவிப்பாளர்
|
சத்யன் |
குருவின் நண்பர்
|
நிவேதித்தா |
|
மனோபாலா |
பேராசிரியர்
|
சகீலா |
சகீலா
|
[8]
பாடல்கள்
இலக்கம் |
பாடல் |
பாடகர்கள் |
நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) |
பாடல் வரிகள்
|
1 |
எல்லாப்புகழும் |
ஏ. ஆர். இரகுமான் |
05:32 |
வாலி
|
2 |
பொன்மகள் வந்தாள் |
முகம்மது அசுலாம், எம்பர் |
03:06 |
ஆலங்குடி சோமு
|
3 |
நீ மரிலின் மன்றோ |
பென்னி தயால், உச்சயினீ |
06:15 |
நா. முத்துக்குமார்
|
4 |
வளையப்பட்டித் தவிலே |
நரேசு ஐயர், உச்சயினீ, மதுமிதா |
05:44 |
நா. முத்துக்குமார்
|
5 |
கேளாமல் கையிலே |
சிறீராம் பார்த்தசாரதி, சைந்தவி |
05:28 |
தாமரை
|
6 |
மதுரைக்குப் போகாதடீ |
பென்னி தயால், அர்ச்சித்து, தர்சனா |
05:23 |
பா. விசய்
|
[9]
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "டைட்டிலுக்கு ஏத்த மாதிரி விஜய் செம ஸ்டைலிஷ்! ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அழகழகான மேனரிசங்களில் அசரடிக்கிறார். நடனங்களும் செம கலக்கல். வழக்கமான கதைகளைவிட்டு புது முயற்சி எடுத்ததற்காக விஜய்க்கு ஒரு வெல்கம் பொக்கே! எதிர்காலத்தை அறிந்து தவிக்கும் குரு, குஷி மைனர் பிரகாஷ் என இரண்டு கேரக்டரிலும் விஜய்யின் பெர்ஃபாமன்ஸ், சர்ப்ரைஸ் போனஸ்!" என்றும் "அறிமுக இயக்குநர் பரதன், விஜய்க்காக கலர்ஃபுல் தோரணம் கட்டியிருக்கிறார். கூடவே, பழைய ஃபார்முலா திரைக்கதையையும் கொஞ்சம் சரி பண்ணியிருந்தால், அழகிய தமிழ்ப் படமாக மனதில் பதிந்திருக்குமே!" என்றும் எழுதி 40/100 மதிப்பெண்களை வழங்கினர்.[10]
மேற்கோள்கள்