அழகுசமுத்திரம்
அழகுசமுத்திரம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் அழகுசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 277.39 மீ. உயரத்தில், (11°40′13″N 78°01′28″E / 11.6704°N 78.0245°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அழகுசமுத்திரம் அமையப் பெற்றுள்ளது. மக்கள்தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், அழகுசமுத்திரம் ஊரின் மொத்த மக்கள்தொகை 3,264 பேர் ஆகும். இதில் 1,732 பேர் ஆண்கள் மற்றும் 1,532 பேர் பெண்கள் ஆவர்.[2] சமயம்இந்துக் கோயில்சஞ்சீவராய பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்று அழகுசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[3] அரசியல்அழகுசமுத்திரம் பகுதியானது, சேலம் மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, சேலம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia