அழைப்பிதழ் (திரைப்படம்)
அழைப்பிதழ் என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். பி. கே. ராஜ்மோகன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்களான ரதீஷ், சோனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், எம். எசு. பாசுகர், பாலு ஆனந்த், பி. கே. ராஜ்மோகன், உமா கவுரி, எழில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிடேஷ் இசை அமைத்துள்ளார். படமானது 11 சூலை 2008 இல் வெளியானது.[1][2][3] நடிகர்கள்
இசைதிரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் ஹிடேஷ் அமைத்துள்ளார். இசைப்பதிவில் பழனி பாரதி, நா. முத்துக்குமார் ஆகியோர் எழுதிய ஐந்து பாடல்கள் உள்ளன.[4][5]
வரவேற்புஒரு விமர்சகர் 5 க்கு 1.75 என படத்துக்கு மதிப்பெண்ணிட்டு, "இசை சராசரிக்கும் குறைவானது, ஒளிப்பதிவோ நேர்த்தி இல்லை, படத் தொகுப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம், திரைக்கதை எளிமையாக உள்ளது" என்று முடித்தார்.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia