ஆகவராமன்

ஆகவராமன் தென்காசியை தலைநகரமாகக் கொண்ட பாண்டியர் வம்சத்திலுள்ள ஒரு இளவரசன் ஆவான். புதுக்கோட்டை செப்பேடு அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் என்ற மன்னனுக்கு அபிராமபராக்கிரம பாண்டியன் ,ஆகவராமன் என இரு தம்பிமார் இருந்தனர் எனக் குறிப்பிடுவதைக் கொண்டு இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்ற மன்னனின் மகன் இவன் என்பதை அறியலாம்.

நாணயவியல்

தென்காசியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறுநிலத்தவராய் இருந்த போதிலும் அவர்கள் பெயரிலேயே நாணயங்கள் வெளியிட்டப்பட்டன. இதற்கு ஆகவராமன் என்னும் இவனது பெயர் பொறித்த நாணயங்களையே இதற்கு ஆதாரமாகக் கொள்ளலாம்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழர் காசு இயல் (நூல்), நடன காசிநாதன்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya