ஆகாசபுரீசுவரர் கோயில்
ஆகாசபுரீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் கடுவெளி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] அமைவிடம்கடல் மட்டத்திலிருந்து சுமார் 69.62 மீட்டர்கள் (228.4 அடி) உயரத்தில், (10°52′48″N 79°04′02″E / 10.880073°N 79.067284°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கல்லணைக்கு அருகில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.[2] தலச் சிறப்புகடுவெளிச் சித்தர் என்ற சித்தர் பிறந்த தலமான இக்கோயில் அமைந்துள்ள இடம் கடுவெளி ஆகும். தான் அறிந்த ஞானத்தை இவ்வுலக மக்களும் பயன்பெறும் வகையில் அதைப் போதித்தார். மேலும், இத்தலத்தின் இறைவனைத் தரிசிக்க வேண்டி, இங்குள்ள கோயிலுக்கு விஜயம் செய்து தவமிருந்தார். இறைவன் அவருக்கு காட்சி தரும் பொருட்டு, நந்தியை கோயில் மண்டபத்திற்கு வெளியில் நிற்கச் செய்தார். நந்தியும் அவ்வாறே வெளியே நிற்க, இக்கோயிலின் இறைவர் கடுவெளிச் சித்தருக்கு காட்சி தந்து அவருக்கு அருளினார். அதன் பின்னர், நந்தி சிலை வெளியில் காட்சிபட அமைக்கப்பட்டது.[3] இச்சித்தரின் பெருமையை அறிந்த இப்பகுதியை ஆண்ட சோழ மன்னன், அவரது பெயராலேயே இவ்வூர் கடுவெளி என்று அழைக்கப்பட உத்தரவிட்டான். இக்கோயிலுக்கும் திருப்பணிகள் நடைபெறச் செய்தான்.[4] திருவிழாக்கள்மகா சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்தரம், அன்னாபிசேகம் மற்றும் தைப்பூசம் ஆகியவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia