தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி (Thanjavur Lok Sabha constituency), தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், 30ஆவது தொகுதி ஆகும். இத்தொகுதியில் 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது. தொகுதி மறுசீரமைப்புதஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகள் ஆனது, தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றன. அதே போன்று நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் புதிதாக இடம் பெற்றது. முன்பு தஞ்சாவூர் தொகுதியில் இருந்த திருவோணம், பாபநாசம், வலங்கைமான் ஆகிய தொகுதிகள் நீக்கப்பட்டன. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளும், பொதுத் தொகுதிகளாகும். சட்டமன்றத் தொகுதிகள்இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை: மக்களவை உறுப்பினர்கள்இதுவரை இத்தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்: 15ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்13 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் பழனிமாணிக்கம், மதிமுகவின் துரை பாலகிருட்டிணனை, 101,787 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
16ஆவது மக்களவைத் தேர்தல்முக்கிய வேட்பாளர்கள்
வாக்குப்பதிவு
17ஆவது மக்களவைத் தேர்தல்முக்கிய வேட்பாளர்கள்இத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் எஸ். எஸ். பழனிமாணிக்கம், தமிழ் மாநில காங்கிரசு கட்சி வேட்பாளரான, நடராஜனை 3,68,129 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
2024
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia