ஆக்ரோகாந்தோசோரஸ்
ஆக்ரோகாந்தோசோரஸ் (Acrocanthosaurus) (உச்சரிப்பு /ˌækrəˌkænθəˈsɔrəs/ or ak-ro-KAN-tho-SAWR-us; பொருள்: 'உயர்ந்த-முதுகெலும்புப் பல்லி') என்பது அலோசோரிட் தேரோபோட் தொன்மாப் பேரினத்தைச் சேர்ந்த விலங்கு ஆகும். இவை தற்போதைய வட அமெரிக்காவில் ஏறத்தாழ 125 தொடக்கம் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரை நடுக் கிரேத்தேசியக் காலத்தில் வாழ்ந்தன. பல தொன்மாப் பேரினங்களைப் போலவே ஆக்ரோகாந்தோசோரஸ், ஆ. ஆதோகென்சிஸ் என்னும் ஓரே ஒரு இனத்தை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இதன் பற்களாகக் கருதப்படுவன கிழக்குப் பகுதியில் மேரிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பினும், புதைபடிவ எச்சங்கள், பெரும்பான்மையாக ஐக்கிய அமெரிக்காவில், ஒக்லஹோமா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களிலேயே காணப்பட்டுள்ளது.[1][2][3] ஆக்ரோகாந்தோசோரஸ், ஒரு இருகாலி, இரைகொல்லி ஆகும். இதன் பெயர் குறிப்பதைப் போலவே இதற்கு உயர்ந்த முள்ளந்தண்டுகள் காணப்படுகின்றன. இது மிகப்பெரிய தேரோப்பொட்டுகளில் ஒன்றாகும். இதன் நீள 12 மீட்டர் (40 அடி) வரை இருக்கும். இவை சுமார் 2.40 மெட்ரிக் தொன்கள் வரை எடையும் கொண்டவை. இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia