கிரீத்தேசியக் காலம்
கிரீத்தேசியம் அல்லது கிரீத்தேசியக் காலம் (உச்சரிப்பு /kriːˈteɪʃəs/, கலைச்சொல் கற்பொடிக் காலம்) என்பது ஜூராசிக் காலத்தின் (Expression error: Unexpected round operator. Expression error: Unexpected < operator. ± 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) முடிவிலிருந்து பலியோசீன் காலத் (66 ± 4 Ma) தொடக்கம் வரையான நிலவியல் காலப் பகுதியையும், முறைமையையும் குறிக்கும். இதுவே மெசோசோயிக் ஊழியின் கடைசி காலப் பகுதியாகும். 80 மில்லியன் ஆண்டுகளைக் கொண்ட இக் காலப்பகுதியே பனரோசோயிக் பேருழியின் மிக நீண்ட காலப் பகுதியும் ஆகும். கிரீத்தேசியக் காலத்தின் பின் எல்லை, மெசோசோயிக் மற்றும் செனோசோயிக் ஊழிகளுக்கு இடையிலான எல்லையையும் குறிக்கிறது. கிரீத்தேசியம் என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Cretaceous என்பது இலத்தீன் மொழியில் சுண்ணக்கட்டியைக் குறிக்கும் creta என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.[7] இது 1822 ஆம் ஆண்டு பெல்சிய நிலவியலாளர் ஜீன் டி அலோய் அவர்களால் பரிஸ் பள்ளத்தாக்கில் காணப்பட்ட பாறை அடுக்கைப் பயன்படுத்தி முதலாவதாக தனிக் காலமாக அடையாளப்படுத்தப்பட்டது.[8] ஐரோப்பா முழுவதும் செறிவாகக் காணப்படும் பின் கிரீத்தேசியக் காலத்தைச் சேர்ந்த சுண்ணக்கல் படிவுகள் காரணமாக இப்பெயர் இடப்பட்டது.
மேற்கோள்கள்
குறிப்புகள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia