ஆங்கிலிக்கம்
ஆங்கிலிக்கம் (இலங்கை வழக்கு: அங்கிலிக்கன்)என்பது கிறித்தவத்தின் ஒரு முக்கியப் பிரிவு மற்றும் வரலாறுமிகு பாரம்பரியமாகும். சர்வதேச ஆங்கிலிக்க ஒன்றியத்தில் இணைந்துள்ள திருச்சபைகளின் போதனையும் உபதேசமும் ஆங்கிலிக்கம் எனப்படலாம். இவையாவும் இங்கிலாந்து திருச்சபை, அதன் வழிபாடு மற்றும் தேவாலய அமைப்பை பின் தொடர்கிறன. ஆங்கிலிக்கம், கத்தோலிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபைகள், மற்றும் மரபுவழி திருச்சபைகளுடன், கிறித்தவத்தில் ஒரு முக்கிய பாரம்பரியமாக திகழ்கிறது.[1][2][3] தோற்றம்ஆங்கிலிக்க என்னும் சொல், 'ecclesia anglicana' (வட்டெழுத்து: எக்லீஸியா ஆங்க்லிகானா) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொருள் 'ஆங்கில ஆலயம்' என கூறலாம். ஆங்கிலிக்க ஒன்றியத்தின் வெளி உள்ள சில திருச்சபைகள் தங்களை ஆங்கிலிக்க என அழைத்தாலும், அநேகமான ஆங்கிலிக்க திருச்சபைகள் ஆங்கிலிக்க ஒன்றியத்தில் அமைந்துள்ளன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia