இயேசுவின் பணிவாழ்வு அல்லது இயேசுவின் மறைபணி என்பது யோர்தான் ஆற்றில்இயேசு கிறிஸ்துதிருமுழுக்கு பெறுவதில் தொடங்கி அவரின் இறுதி இராவுணவு முடிய உள்ள அவரின் வாழ்க்கைப் பகுதியினைக் குறிக்கும்.[1]லூக்கா நற்செய்தி (3:23) இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது எனக்குறிக்கின்றது.[2][3] வரலாற்றாசிரியர்களின் படி இயேசுவின் பணிவாழ்வு கி.பி 27-29 இல் துவங்கி கி.பி 30-36 இல் முடிவடைந்திருக்கலாம்.[2][3][4]
கலிலேயாவில் தொடக்கப் பணிவாழ்வு இயேசுவின் திருமுழுக்கிற்குப் பிறகு சோதனைக்காக கலிலேயாவுக்குத் திரும்பி வருவதிலும்.[5] கலிலேயாவில் பணியாற்றி தனது முதல் சீடர்களை தேர்வுசெய்வதிலும் அடங்குகின்றது.[1][6]கலிலேயாவில் பணிவாழ்வில் திருத்தூதர்களைத் தேர்வு செய்வதிலும், இயேசுவின் பணிவாழ்வின் பெரும் பகுதியுமாக அமைகின்றது.[7][8]கலிலேயாவில் இறுதி பணிவாழ்வு திருமுழுக்கு யோவானின் இறப்பில் தொடங்கி எருசலேம் செல்ல இயேசு ஆயத்தமாவதற்கு முன் முடிவடைகின்றது.[9][10]யூதேயாவில் இயேசுவின் பணிவாழ்வில் யூதேயாவழியாக எருசலேம் செல்ல இயேசு ஆயத்தமாகின்றார்.[11][12][13][13][14][14] இக்காலத்தில் அவர் தான் முன்னர் திருமுழுக்கு பெற்ற யோர்தார் ஆற்றங்கரைப்பகுதிகளில் பணியாற்றினார்.[15][16][17]
↑ 3.03.1Paul L. Maier "The Date of the Nativity and Chronology of Jesus" in Chronos, kairos, Christos: nativity and chronological studies by Jerry Vardaman, Edwin M. Yamauchi 1989 பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-931464-50-1 pages 113-129